tamilnadu

img

தொழிலாளர்கள் ஒற்றுமையே அரசின் கொள்கைகளுக்கு பதில்!

தொழிலாளர்கள் ஒற்றுமையே அரசின் கொள்கைகளுக்கு பதில்!

கோவை, ஜூலை 22 – ஆட்சியாளர்களால் தொடர்ந்து தொழிலாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தொழி லாளர்களின் உழைப்பு சுரண்டப்ப டுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வது, தொழிலாளர் களின் ஒற்றுமையில்தான் உள்ளது.  இதுவே அரசின் கொள்கைகளுக்கு  நாம் அளிக்கும் பதில் என சிஐடியு தமிழ்நாடு மாநிலத்தலைவர் அ. சவுந்திராசன் தெரிவித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் அகில இந்திய மாநாடு கோவை யில் நடைபெறுகிறது. இம் மாநாட்டை வாழ்த்தி, சிஐடியு தமிழ் நாடு மாநிலத் தலைவர் அ. சவுந்திர ராசன் பேசுகையில், “நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து, ஒப் பந்தத் தொழிலாளர்களை நியமிப் பது அரசின் முக்கியக் கொள்கை யாக உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவ னம் வெளிநாடுகளில் இருந்து 4ஜி  தொழில்நுட்பத்தைப் பெறுவதற் குத் தடுக்கப்படுகிறது. அதே நேரத் தில், தனியார் நிறுவனங்களுக்கு இந்த விதிகள் பொருந்தாதது ஏன்.  அதானி மற்றும் அம்பானி போன்ற  கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக அரசு செயல்படுவதால் தான் பிஎஸ்என்எல் நிறுவனம்  திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகி றது.  பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மட்டும் இவ்வளவு மோசமான தாக்குதல் தொடுப்பது நமக்கு புரி யாத புதிரல்ல. இது அவர்களின்  நண்பர்களான கார்ப்பரேட் முதலா ளிகளின் நிறுவனங்களுக்காகச் செய்ய வேண்டிய சேவை என அவர் கள் நினைக்கிறார்கள் . பாஜக ஆட்சி யில் தொழிற்சங்கங்கள் கடுமை யான தாக்குதலுக்கு ஆளாகி வரு கிறது. தற்போது 100 நிரந்தரத்  தொழிலாளர்கள் இருந்தால், 1000  ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரி யும் நிலை உருவாகியுள்ளது. இந் தச் சூழ்நிலையில், அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்றி ணைக்க வேண்டும். அப்போது தான் மிக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அரசாங் கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு  “சிவில் வார் போன்ற ஒரு போராட் டத்தையே தொழிலாளர்கள் முன் னெடுக்க வேண்டிய தேவை இருக் கிறது. இல்லாவிட்டால் நம்மை நாம்  காப்பாற்றிக் கொள்ள முடியாது. தொழிலாளர் ஒற்றுமையின் மூல மாகத் தொழிலாளர்களுக்கு எதி ரான சட்டத் திருத்தங்கள் எதையும்  ஏற்காமல் அவற்றைத் தூக்கி எறிய  வேண்டும். வங்கி ஊழியர் சங்கம், எல்ஐசி ஊழியர் சங்கம், அரசு ஊழியர் மற் றும் ஆசிரியர் சங்கங்கள் இத் தகைய போராட்டங்களை வெற்றிக ரமாக மேற்கொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும் வலுவாக முன்னேறி, அரசின் தவ றான கொள்கைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும். அத்தகைய திசைவழியை இம் மாநாடு காட்டும் என்று வாழ்த்துக் களைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.