வீணாகும் குடிநீர், சாலையில் உருவாகும் அபாய குழிகள்
ராணிப்பேட்டை, ஆக 14- ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை எதிரில் எல்.எப் சாலையில் ராணிப்பேட்டை சந்தை மைதானத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு செல்லும் முக்கிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு சில வாரங்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. அதனால் உழவர் சந்தை எதிரில் அபாய குழிகள் உருவாகி வருகிறது. வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து ஏற்படுத்தும் சூழல் உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.