அரசு வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை கிராமசபையை புறக்கணித்த பழங்குடியின மக்கள்
உதகை, அக்.11- கூடலூர் அருகே அரசு வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்திய வனத் துறையை கண்டித்து, சனியன்று நடை பெற்ற கிராமசபையை பழங்குடியின மக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற் பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட மேல அம் பலம் கிராமத்தில் பழங்குடியின மக்க ளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் அடிப் படையில், 32 வீடுகள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. அதில் 5 வீடுகளில் பணியை தொடங்கி 60 சதவிகிதம் முடி வடைந்தன. ஆனால், வனத்துறை இப் பணியை நிலப்பிரச்சனையை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக பணிகள் நடைபெறாமல் உள்ளன. இந்நிலை யில், சனியன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பழங்குடி யின மக்கள் உடனடியாக தங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என வலியு றுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.கே. மணி தலைமையில் பழங்குடியின மக் கள் இரண்டு மணி நேரம் கிராமச பையை புறக்கணித்தனர். இச்சூழ் நிலையை புரிந்து கொண்ட வருவாய்த் துறை, வனத்துறையினர், தங்களது மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். தொடர்ந்து, உடனடியாக (நாளை) இடையில் நிறுத்தப்பட்ட பணியை தொடங்கலாம் என சங்கத்தின் தலைவர் சி.கே.மணியிடமும், பழங் குடியின மக்களிடமும் நேரடியாக வாக்குறுதியளித்தனர். அதனடிப்படை யில் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப் பட்டது. இதைத்தொடர்ந்து, மண்வயல் பகு தியில் யானை உள்ளிட்ட வனவிலங்கு களின் நடமாட்டம் அதிகமாக இருப்ப தால், மூன்றரை கிலோ மீட்டர் தூரத் திற்கு பொதுமக்கள் நிதி திரட்டி சோலார் மின் வேலி அமைக்கும் பணியை தொடங்கினர். இப்பணி நடந்து கொண் டிருக்கும் பொழுதே வனத்துறையினர் தடுத்து, அப்பணியை மேற்கொண்டி ருந்த 10 பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை வனத் துறை திரும்பப்பெற வேண்டும். இனி மேல் இதுபோன்ற பொய் வழக்குகளை வனத்துறை மக்கள் மீது ஏவும் பொழுது மண்வயல் மக்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டத்திற்கு வித்திடு வோம் என கிராம சபையில் ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
