tamilnadu

img

வாய்க்காலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

வாய்க்காலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கோபி, ஆக.11- கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிப்பதால், அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சுற்றுலாப் பயணிகள்  குவிந்தனர். மேலும், பவானி  ஆற்றில் ஆபத்தான இடங்க ளில் தடையை மீறி குளித்து கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் பண்டிகை மற்றும்  விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்க ளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பய ணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு  செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில  நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் அணை யின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த உபரி நீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்பட் டது. இதனையடுத்து வெள்ளப்பெருக்கு கார ணமாக கொடிவேரி அணையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணி கள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் நீ்ர்வளத் துறையினர் தடை விதித்தும் பவானி ஆற்றிங் கரையோர பகுதி மக்களுக்கு வருவாய்துறை யினர் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொடிவேரி அணையில் 15 நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த தடை நீடிப்பதால், ஞாயிறு விடுமுறை என்ப தால் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அணையில் குளிக்க முடியாமல் அருகே உள்ள அரக்கன்கோட்டை வாய்க்காலில் குவிந்து குளித்து மகிழ்ந்த னர். இதனால் பெரியகொடிவேரி செல்லும்  சாலையில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் கொடிவேரி அணையில் தடை விதிப்பால் தடை விதிக்கப்பட்ட பவானி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி  குளித்து கொண்டிருந்தவர்களை தகவல றிந்து வந்த காவல்துறையினர் அப்புறப்ப டுத்தி வெளியேற்றினர். தொடர்ந்து 15 ஆவது  நாளாக கொடிவேரி அணையில் சுற்றுலாப்  பயணிகளுக்கு தடை நீடிப்பதால் பவானி ஆற் றில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள்  ஆபத்தான இடங்களில் குளிப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியி னர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.