tamilnadu

img

மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் வெற்றி: தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்களுக்கு கூலி உயர்வு

மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் வெற்றி: தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்களுக்கு கூலி உயர்வு

திருப்பூர், அக்.11- திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் கள், ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மூன்று நாட்களாக நடை பெற்ற வேலை நிறுத்த போராட்டம் வெற்றிய டைந்தது. பேச்சுவார்த்தையில், தூய்மைப்  பணியாளர்களுக்கு ரூ.617, ஓட்டுநர்களுக்கு  ரூ.867 வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய  உயர்வு,  போனஸ் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த 9 ஆம் தேதி முதல்  பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து வெள்ளியன்று நடை பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப டவில்லை.  இதைதொடர்ந்து 3 ஆவது நாளாக  சனியன்று கருவம்பாளையம் பகுதியில் உள்ள மாட்டுக்கொட்டகை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,  தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான  உணவுகளை மாட்டு கொட்டகை வளாகத்தில்  சமைத்து உண்டு போராட்டத்தை தொடர்ந்த னர்.  இதையடுத்து சனியன்று மதியம் மாநக ராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்பி ரமணியம், மாநகராட்சி அலுவலர்கள், சுகா தார அலுவலர்கள், எஸ்டபல்யூஎம்எஸ் (SWMS) ஒப்பந்த நிறுவனம் ஆகியோர் சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், நிர் வாகிகள் கே.உண்ணிகிருஷ்ணன், ஆனந்த்,  துரைசாமி, அஜித், ரவி, வினோத் உள்ளிட் டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த  அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணி யாளர்களுக்கு ரூ.507 ல் இருந்து ரூ.613 ஆக  உயர்த்தி வழங்கப்படும், ஓட்டுநர்களுக்கு ரூ.867 ஊதியமாக வழங்கப்படும். அக்டோபர்  15 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான போனஸ் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். பிஎப்  பிடித்தம் குறித்த கணக்கு விவரங்கங்களை முறைப்படுத்த மண்டல வாரியாக முகாம்கள்  நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் இருந்து ஊதியத்திற்கான ரசீது வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எவ்வித பலிவாங்கள் நடவடிக்கையும் எடுக்கப்படாது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.