கொடி மரத்தை அகற்றி உடுமலை நகராட்சி நிர்வாகம் அடாவடி உறுதிமிக்க போராட்டத்தால் மீட்கப்பட்டது உரிமை!
உடுமலை, ஜூலை 12– உடுமலையில் அரசு ஊழியர் சங்கக் கொடி மரங்களையும், தியா கிகள் நினைவு ஸ்தூபியையும் நகராட்சி ஊழியர்கள் அனுமதி யின்றி அகற்றியதைக் கண்டித்து, உறுதிமிக்க போராட்டத்தை மேற் கொண்டதையடுத்து, புதிய கொடி மரங்கள் நிறுவப்பட்டு, சங்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. மேலும், இடிக்கப்பட்ட நினைவு ஸ்தூபியை விரைந்து கட்டித்தரவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டக்கிளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத் தின் கொடி மரங்களும், தியாகிகள் நினைவு ஸ்தூபியும் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரா மரிக்கப்பட்டு வந்தன. இந்நிலை யில், வெள்ளியன்று, உடுமலைப் பேட்டை நகராட்சி நகரமைப்பு அலு வலர் மற்றும் சிலர் ஜேசிபி இயந் திரம் கொண்டு வந்து கொடி மரங்க ளையும் நினைவு ஸ்தூபியையும் இடித்து சேதப்படுத்தினர். இந்தத் தகவலறிந்த, அரசு ஊழியர் சங்கத் தினர் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் திரண்டனர். மேலும், தொழிற்சங்க உரிமைகளை அவமதிக்கும் வகை யில் செயல்பட்ட நகராட்சி நகர மைப்பு அலுவலர் மற்றும் ஊழியர் களையும், இடிப்புக்கு பயன்படுத்தப் பட்ட வாகனங்களையும் சிறைப் பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத் திற்கு வந்து, நகர்மன்றத் தலைவர் மத்தீன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தொழிற்சங்கக் கொடியைச் சேதப் படுத்தி அகற்றியது தவறு என்றும், இந்தச் செயலில் ஈடுபட்ட நகர மைப்பு அலுவலர் மற்றும் அவரு டன் இப்பணியில் ஈடுபட்டவர்கள் மீது நகராட்சி ஆணையரிடம் நடவ டிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப் படும் என்றும் உறுதியளித்தார். மேலும், சேதப்படுத்தப்பட்ட கொடி மரங்களுக்குப் பதிலாக புதிய கொடி மரங்களை இடித்த நகர மைப்பு அலுவலர் தனது சொந்தச் செலவில் வாங்கித் தருவார் என் றும், இடிக்கப்பட்ட தியாகிகள் நினைவு ஸ்தூபி புதிதாக கட்டி தரப்படும் என்றும் ஒப்புக்கொள் ளப்பட்டது. இதன் அடிப்படையில், இரவோடு இரவாக புதிய கொடி மரங்கள் வாங்கி வழங்கப்பட்டு, அதே இடத்தில் கொடி மரங்கள் அமைக்கப்பட்டன. சங்கத்தின் நிர் வாகிகள் மேள தாளங்கள் மற்றும் தாரை தப்பட்டை முழங்க, விண்ண திரும் முழக்கங்களுடன் சங்கக் கொடிகளை ஏற்றினர். இது குறித்து சங்கத்தின் மாவட் டச் செயலாளர் பாலசுப்பிரமணி யம் கூறுகையில், “தொழிற்சங்க உரிமையை நிலை நிறுத்துவதற் கான களப் போராட்டத்தில் உறுதி யோடு களத்தில் நின்று போராடி உரிமையை நிலைநிறுத்திய அனைத்துத் தோழர்களையும் வாழ்த்துகிறோம், பாராட்டுகி றோம். உரிமையைத் தக்க வைத் துக் கொள்வதற்கான உறுதிமிக்க பயணத்தை முன்னெடுப்போம். தொழிற்சங்க உரிமையைப் போற் றிப் பாதுகாப்போம்,” என்றார். போக்குவரத்துக்கோ, வேறு யாருக்கோ இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்தியபோது, அங்கு வந்த உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நமச் சிவாயம், அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அரசு வேலையைப் பறித்து விடுவேன் என்று மிரட்டி யுள்ளார். இன்னும் சில நாட்களில் தமிழக முதல்வர் உடுமலைக்கு வரவிருக்கும் நிலையில், எவ் வித பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்க துறை ஊழியர்கள் பணி யாற்றி வரும்போது, உடுமலை காவல்துறை பிரச்சனைகளைப் பெரிதாக்க நினைப்பது ஏன் என்று தெரியவில்லை. உடுமலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் அவர் மீண்டும் அரசு ஊழி யர்களைப் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவார். இதனால் இந்தப் பிரச் சனை மாநில அளவிலான போராட் டமாக மாறும் என அரசு ஊழியர் கள் தெரிவித்துள்ளனர்.