அரை நூற்றாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்ட பெரிய செங்காத்தாகுளம் மக்கள்!
திருவள்ளூர், ஆக 29- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த வட மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய செங்காத்தாகுளம் கிரா மத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 20 குடும்பங்கள், பட்டியலினத்தை சேர்ந்த 28 குடும்பங்கள், இஸ்லா மியர்கள் 35 குடும்பங்கள் என பல தலைமுறைகளாக மேய்கால் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். விளிம்பு நிலையில் வறுமை யின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர், அரசு நடத்திய முகாம்களிலும் மனு அளித்துள்ளனர். எனினும் பட்டா கிடைக்கவில்லை. குளத்து நீரை அருந்தும் மக்கள் பெரிய செங்காத்தாகுளம் 8 தெருக்கள் உள்ளன. ஒரு தெரு விற்கு மட்டும் மின் கம்பங்கள் உள்ளன. மற்ற 7 தெருக்களில் மின் கம்பங்கள் இல்லாததால் அந்த பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. அடிப்படைத்தேவையான மின்சாரம் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை அதிகாரவர்க்கம் உணர வேண்டும். குடிநீர் பற்றாக் குறையால் சுத்திகரிக்கப்படாத சுகாதாரமற்ற குளத்து நீரை அருந்தும் அவலம் தொடர்கிறது என்கின்றனர். இங்கு அங்கன்வாடி காப்பகம் இல்லாததால் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எந்த ஊட்டச்சத்தும் கிடைக்காமல் சோகையில் உள்ளனர். விரைவில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது. ரேசன் பொருட்கள் வாங்க 4.கி.மீ நடைபயணம்! ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்டது தான் ரேசன் கடைகள். அதுவும் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு தற்போது அறிவித்துள்ள நிலையில், பெரிய செங்காத்தாகுளம் பகுதியில் 150 ரேசன் கார்டுகள் உள்ளன. பகுதிநேர ரேசன் கடை அமைக்காததால் மக்கள் 4 கி.மீ.தூரம் நடந்து சென்று தான் ரேசன் பொருட்களை வாங்க வேண்டிய அவல நிலையுள்ளது. இங்கு பகுதிநேர ரேசன் கடை அமைக்க வேண்டும். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக 29), ஊத்துக்கோட்டை விஏஓ அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டாட்சியருக்காக காத்திருந்த மக்கள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும் என்று ஊர்வலமாக சென்றனர். வட்டாட்சியர் வேறு அலுவல் காரணமாக சென்றதால், 2 மணிநேரம் காத்திருந்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் உறுதி பெரிய செங்காத்தாகுளம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பகுதிநேர ரேசன் கடை அமைக்கப்படும், அங்கன்வாடி காப்பகம் ஆகியவை உடனடியாக அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் ஆ.ராஜேஷ்குமார் உறுதியளித்தார். இந்த போராட்டத்திற்கு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார்.இதில் மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை, மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, பொருளாளர் டி.செஞ்சியம்மா, ஒன்றிய செயலாளர் கே.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் பி.அற்புதம், மாவட்ட குழு உறுப்பினர் அய்யனார், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.பன்னீர்செல்வம், ஊத்துக் கோட்டை வட்டச் செயலாளர் என்.கங்காதரன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலை யரசன், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.டில்லி, செயலாளர் ஜி.ராஜா ஆகியோர் பேசினர்.