அனுபவ நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றுவதா?
விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, அக்.24- நூறாண்டு காலம் அனுபவ நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்ற முயற்சிக்கும் வனத் துறையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலாபுரம் கிராமத்தில், ஏழை சிறு, குறு விவசாயிகள் வசித்து வருகின் றனர். இங்கு சுமார் நூறாண்டுக ளுக்கு முன்பு அங்குள்ள மேடு பள் ளங்களை சமன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசா யிகள் தங்களின் விளைநிலங்க ளுக்கு பட்டா கேட்டு பல ஆண்டு காலம் போராடி வருகின்றனர். இந் நிலையில், அனுபவ நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளி யேற்ற வனத்துறையினர் முயற் சித்து வருகின்றனர். நூறாண்டு காலம் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றக் கூடாது. நீண்ட கால அனுபவ நிலங் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டத் தலைவர் எஸ்.தீர்த்தகிரி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலா ளர் சோ.அருச்சுனன், துணைத்த லைவர் கே.என்.மல்லையன், வட் டச் செயலாளர் சி.வஞ்சி, நிர்வாகி கள் மனோகரன், பொன்னுசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க வட் டச் செயலாளர் எம்.கணேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ.தனுசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, வட்டச் செயலாளர் பி. கிருஷ்ணவேணி, வாலிபர் சங்க வட்டச் செயலாளர் ராகப்பிரியா உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
