பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டு சிறை
தருமபுரி, ஆக.1- 16 வயது சிறுமியை கடத் திச் சென்று பாலியல் வன் கொடுமை செய்த இளைஞ ருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் பிரபு (28). ஓட்டுநரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை வேனில் கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற் றோர் கொடுத்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பியோடிய பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந் தது. விசாரணையின் முடி வில் பிரபு மீதான குற்றச் சாட்டு உறுதியானது. இதை யடுத்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார்.
மின்சாரம் திருட்டு: ரூ.1.76 லட்சம் அபராதம்
சேலம், ஆக.1- சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், குள்ளம்பட்டி, வால் காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து மின் சாரத்தை எடுத்து பயன்படுத்துவதாக விவசாயிகள் அளித்த புகாரின்பேரில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். அரசிராமணி, குறுக்குப்பாறையூர், வால்காடு பகுதி யில் விவசாய நிலத்தில் செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி வேல் என்பவர், மணி என்பவருக்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து, அரசு அனுமதியின்றி மண் எடுத்து, அந்த மண்ணை மணலாக மாற்றும் இயந்திரப் பயன்பாட் டுக்கு அங்குள்ள மின்கம்பத்திலிருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சக்திவேலுக்கு ரூ.1.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொலைநிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை
சேலம், ஆக.1- பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலை நிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை தற் போது துவங்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தேசியத்தர மதிப்பீடு மற்றும் அங்கீகார மன்றத்தில் (NAAC) 2021ஆம் ஆண்டில் ‘A++’ அங்கீகாரத்தையும், 2024 ஆம் ஆண்டு தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப் பில் (NIRF) இந்தியப் பல்கலைக்கழகங்கள் அளவில் 56 ஆவது இடத்தையும், மாநில பொதுப் பல்கலைக்கழகங்களின் தரவரி சைப் பட்டியலில் 25ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையம் (Centre for Distance and Online Education) 2001 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பாடப்பிரிவு களில் தொலைநிலைக் கல்விச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், 2025 – 26 ஆம் கல்வியாண்டு முதல் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. வரலாறு, எம்.ஏ. பொருளியல், எம்.ஏ. சமூகவியல் ஆகிய புதிய முதுநிலைப் பாடப்பிரிவுகளில் தொலைநிலைக் கல்வி வழியாக (ODL) மாணவர்கள் சேர்க்கை செய்து கொள்வதற்குப் பல்கலைக்கழக மானியக்குழு (UGC-DEB) அனுமதி வழங்கி யுள்ளது. மேலும், ஏற்கனவே அனுமதி பெற் றுள்ள எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி. கணிதவியல், எம்.சி.ஏ., பட்டயம் (Diploma) மற்றும் சான்றிதழ் (Certificate) பாடப்பிரிவுகளுக்கும் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேற்கண்ட அனைத்துப் பாடப்பிரிவுக ளுக்குமான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளைப் பெரியார் https://pride.periyaruniversity.ac.in/pucdoe/ODLRegister என்னும் இணையதளப் பக்கத் தின் வழியாக மாணவர்கள் தெரிந்து கொள்ள லாம். அனைத்து வேலை நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெரியார் பல்கலைக் கழகத் தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையத்தில் சேர்க்கை நடைபெறும். மேலும், கற்றல் உதவி மையங்களிலும் மாண வர் சேர்க்கைக்கான சேவை நடைபெற்று வரு கிறது. மேலும் விவரங்களுக்கும் தொலை நிலை மற்றும் இணையவழிக் கல்வி மையத் தையும், தொலைபேசி: 0427-2345918, 2345258, கைப்பேசி எண்: 9444708425 மூலமும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.