tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை, ஜூலை 25- வால்பாறை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணி யாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, நலவாரிய அடை யாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு புதனன்று நடைபெற்றது. அப்போது மருத்துவ முகாம் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந் நிகழ்வில், நகர்மன்றத் தலைவர் அழகு சுந்தரவள்ளி, திமுக செயலாளர் சுதாகர், நலவாரிய துணைத்தலைவர் செ.கனி மொழி, நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, விடுதலைப் போராட்ட வீரரும், சிபிஎம் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், கேரளம் மாநில  முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறை விற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.