பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
நாமக்கல், ஜூலை 30- ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரி வித்து, 200க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலு வலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தற் போது செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ள, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அணைப்பாளையம் கிரா மத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன. இதற்கு தொடக்கத் திலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள் மற்றும் தனியார் அமைப் பினர், மக்கள் நலக்குழுவினர் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராசிபுரம் பேருந்து நிலையம் மீட்புக்குழுவினர் கடந்த ஓராண் டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இதுதொடர்பாக உயர்நீதிமன் றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந் நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேரடி விசாரணைக்கு பின், பொதுமக்கள் ஆட்சேபனை அல்லது கருத்துகளை ஆக.1 ஆம் தேதிக்குள் (நாளைக்குள்) மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலோ அல்லது ராசிபுரம் நகராட்சி அலுவ லகத்திலோ கொடுக்கலாம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராசிபுரம் நகராட்சி அலுவல கத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரி சையில் நின்று தங்களது மனுக்களை நக ராட்சி நிர்வாகத்திடம் அளித்தனர். இதனி டையே, மனுக்களை வழங்க நகராட்சி அலு வலகத்தில் ஆணையர் இல்லாததால், மக் கள் நலக்குழுவினர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.