tamilnadu

img

மேச்சேரி காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி

மேச்சேரி காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 7 – சேலம் மாவட்டம் மேச்சேரியில் காவல் உதவி ஆய்வாளர் சுதாகரின் அடாவடியை கண்டித்து, திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மேச்சேரி ஒன்றி யக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட இறக்குண்டப்பட்டியில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பத்தை, மணி என்பவர் பிடுங்கி, அப்பகுதி பேரூராட்சி கவுன்சி லரும், மார்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினருமான ஆர்.பழனியின் வீட் டின் முன்பு போட்டுள்ளார். இது தொடர் பாக மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, ஒன்றியச் செயலா ளர் ஜி. மணிமுத்து தலைமையில் மார்க் சிஸ்ட் கட்சியினர் சென்றபோது, அங்கு காவல் உதவி ஆய்வாளராக இருந்த சுதாகர், கட்சி உறுப்பினர்களை தரக் குறைவாகப் பேசியதுடன், குற்றவா ளிக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். இதையடுத்து, கொடிக்கம்பத்தை சட்டவிரோதமாகப் பிடுங்கியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மார்க்சிஸ்ட் கட்சியினரை இழிவுபடுத் திப் பேசிய காவல் உதவி ஆய்வா ளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும், அராஜகமாக கொடிக்கம் பத்தைப் பிடுங்கியவர்கள் மீது சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்தது. இதன்தொடர்ச்சியாக திங்களன்று  காலை, பேருந்து நிலையம் முன் பிருந்து ஒன்றியச் செயலாளர் ஜி. மணி முத்து தலைமையில் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப் பட்ட அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கட்சித்  தலைவர்களிடம் நேரடியாக வந்து பேசி னர். பிரச்சினை தொடர்பாக விசாரித்து  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.