குப்பைக்கிடங்கில் மேயர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சேலம், செப்.1- மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்படும் தீயை கட்டுப்படுத்துவது குறித்து மேயர், ஆணையர் ஆகி யோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கள், செட்டிச்சாவடி பகுதியிலுள்ள குப்பைமேடு கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. ஆனால், அடிக் கடி தீ விபத்து ஏற்படுவதால், அதனை அணைக்க பல முறை முயற்சி செய்தும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவது குறித்து ஞாயிறன்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையர் இளங்கோவன் ஆகி யோர் குப்பைமேடு பகுதியில் நேரில் ஆய்வு மேற் கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்த னர்.