மாதர் சங்க மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
தருமபுரி, ஜூலை 3- மாதர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாட்டிற் கான, வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாட்டை நடத்துவதற்கான வர வேற்புக்குழு அமைப்புக்கூட்டம் அரூரில் நடைபெற் றது. சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் தனலட் சுமி தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ராதேவி, மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன், ஒன்றியச் செயலாளர்கள் பி.குமார், கே.தங்கராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.கே. கோவிந்தன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.தீர்த்தகிரி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், ராமன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வீரபத்திரன், புத்தன், மாற் றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் தமிழ் செல்வி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குறளரசன் உட் பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அரூரில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்ட மும், 24 ஆம் தேதி பிரதிநிதிகள் மாநாடும் நடைபெற வுள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட வரவேற் புக்குழு தலைவராக தமிழ்செல்வி, செயலாளராக தனலட்சுமி, பொருளாளராக லூர்துமேரி உட்பட 51 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது