மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்கு போடும் வனத்துறை வனச்சரக அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை
சேலம், ஜூலை 11- மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து, ஆத்தூர் வனச்சரக அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன் மலைத்தொடர் அடிவாரப் பகுதி யான பூமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்களின் விவசாயத்தை அழிக் கும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்கு களை நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண் டும். இதற்காக விவசாய நிலங்களில் கற் களை அடுக்கி வைப்பதற்காக மலைவாழ் மக்களிடம் வனச்சரக அதிகாரி கவாஸ்கர் மற்றும் வனக்காவலர்கள் மூர்த்தி சக்திவேல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். அதனை தர மறுத்த மலைவாழ் மக்கள் மீது வனத்துறை அதிகாரி கள் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று பயணி யர் மாளிகை பகுதியிலிருந்து பேரணியாக வந்து ஆத்தூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். மார்க்சிஸ்ட் கட்சியின் பூமரத்துப்பட்டி செயலாளர் ஆர்.கருப்பண்ணன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், ஆத் தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் ஆர்.வைரமணி, மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். மலைவாழ் மக்களிடம் வனத் துறையினர் அத்துமீறி நடப்பதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு, அலுவல கத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். ஆனால், அங்கிருந்த காவல் துறையினர் அலுவலகத்தின் கதவை அடைத்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.