பாலஸ்தீனர்கள் படுகொலையை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு! மோடி அரசை கடுமையாக சாடிய பிரியங்கா காந்தி
புதுதில்லி, ஆக. 12 - பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடா னது என்று காங்கிரஸ் பொதுச்செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரியங்கா காந்தி கண்டித்துள் ளார். இதுதொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பிரியங்கா காந்தி கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “இஸ்ரேலிய அரசு இனப்படு கொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள். அதோடு, நூற்றுக்கணக் கானவர்களை இஸ்ரேல் பட்டினி யால் கொன்றுள்ளது, இதில் பலர் குழந்தைகள். மேலும், பல லட்சம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டி ருக்கிறார்கள். அவர்களில் பலர் மரணத்தை நெருங்கும் ஆபத்தில் உள்ளனர். இந்தக் குற்றங்களை மவுனமாக செயல்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பதும்கூட ஒரு குற்றமாகும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது” என பிரியங்கா காந்தி கண்டித்துள்ளார். மேலும், “அல் ஜசீரா தொலைக் ்காட்சியின் ஐந்து பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது, பாலஸ்தீன மண்ணில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொடூரமான குற்ற மாகும். உண்மைக்காக நிற்கத் துணிந்த வர்களின் அளவிட முடியாத தைரி யத்தை, இஸ்ரேல் அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒன்றும் செய்ய முடியாது. ஊடகங்களில் பெரும்பாலானவை அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்கும் அடிமைப்படுத்தப்பட்ட உலகில், இத்தகைய துணிச்சலான ஆன்மாக் கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டி உள்ளன. அவர்கள் சாந்தியடை யட்டும்” எனவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.