tamilnadu

img

‘கூட்ட நெரிசலில் இறப்பது அவமானம்’ ‘அறிவால் எழுக; அறத்தால் வெல்க’

‘கூட்ட நெரிசலில் இறப்பது அவமானம்’ ‘அறிவால் எழுக; அறத்தால் வெல்க’

தருமபுரி, செப். 29- தருமபுரியில் மாவட்ட நிர்வா கம், தகடூர் புத்தகப்பேரவை, மற் றும் பாரதி புத்தகாலயம் இணைந்து  நடத்தும் 7-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வெகுசிறப்பாக நடை பெற்று வருகிறது. புத்தக திருவிழாவில் மூன்றாம் நாள் கருத்தரங்கத்தில், கவிஞர் மனுஷ்ய புத்திரன், இளைஞர்கள் மத்தியில் நிலவும் மோக மனப் பான்மையைக் கண்டித்தும், சமூக  நீதி மற்றும் அறிவுசார் சிந்தனை யின் அவசியத்தை வலியுறுத்தியும் உரையாற்றினார். கருத்தரங்குக்கு மகளிர் திட்ட அலுவலர் லலிதா தலைமை வகித் தார். தகடூர் புத்தகப்பேரவை செய லாளர் மரு. செந்தில் வரவேற்புரை யாற்றினார். விழாவில், கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய ‘வானத்து வாசலிலே’ என்ற புத்த கம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ‘தெய்வத்தால் ஆகாது எனினும்’ என்ற தலைப் பில் கரு. பழனியப்பன் உரையாற்றி னார். அதைத் தொடர்ந்து, கவிஞர் மனுஷ்ய புத்திரன், ‘அறிவால் எழுக; அறத்தால் வெல்க’ என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் பழனி யப்பன், செந்தில் கல்வி குழுமம் நிர் வாக அலுவலர் ரபீக், டிஎன்சி கல்விக்குழும துணைத்தலைவர் தீபக்மனிவண்ணன், தொழிலதிபர் ராமநாதன் உள்ளிட்டோர் சிறப்பு  அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர். வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் ச. இளங்குமரன், கவி ஞர் நவகவி, எழுத்தாளர் இராவிந்தி ரபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கோவிந்த சாமி நிகழ்வை ஒருங்கிணைத்தார். தகடூர் பொருளாளர் எம். கார்த்தி கேயன் நன்றி கூறினார். முன்னதாக, கருத்தரங்கில் கவி ஞர் மனுஷ்ய புத்திரன் பேசுகை யில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் பண்பாடு, சிந் தனைத் திறனை இன்று கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணமாக கரூர் சம் பவத்தை சுட்டிக்காட்டினார். “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியை இரண்டு தினங் களுக்கு முன் நடத்தினோம். அதில்  நான் கலந்துகொண்டேன். அடி மைத்தனம், புறக்கணிப்பு, பொரு ளாதார ஏற்றத்தாழ்வு, சாதியக் கொடுமை ஆகியவற்றிலிருந்து குழந்தைகள் எப்படி முன்னுக்கு வந் தார்கள் என்பது குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசினோம். இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக நாம் இருக்கி றோம். நூறு ஆண்டுகளுக்கு முன்  95 சதவீதம் பேர் கல்வி கற்காத வர்களாக இருந்தனர். ஆயிரம்  ஆண்டுகள் இருந்த இழிவிலிருந்து கடந்த 100 ஆண்டுகளாக நாம் சமூகநீதி பெற்று வருகிறோம். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்குவதைக் கேலி பேசுகின்றனர். ஆனால், வறிய நிலையில் இருக்கும் பெண் களுக்கு அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பு தெரியும். கடந்த நான்கரை  ஆண்டுகால ஆட்சியில் கல்வித்  துறையில் தமிழ்நாடு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க  வைத்துள்ளது. இந்தச் சூழலில்தான், ஒரு வரை பார்க்கக் கூடிய கூட்ட நெரிச லில் சிக்கி இறந்துள்ளனர். குழந்தை களுக்கு அரசியல், சமூகப் பொறுப்பு, தன்மானத்தைக் கற்றுக் கொடுப்பது யார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மனிதரை பார்ப்பதில் என்ன இன் பம் இருக்கிறது? சமூக வலைத்த ளம் வந்த பிறகு எவரும் அதிசயம்  கிடையாது. உலகம் நம் உள்ளங் கையில், கண் எதிரே வந்துவிட்டது. ஒருவரைப் பார்க்க முட்டி மோதி இறப்பது நாம் கற்ற கல்வியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது போன்று பெங்களூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி விழாவிலும் இறப்பு ஏற்பட்டது. இந்த மோகத்தை நாம் கண்டிக்க வேண் டும். ‘நல்ல சிந்தனைதான் கல்வி யின் அடையாளம்’ என்றும், ‘சிந் தனையை மேம்படுத்த வேண்டும்’. தமிழர் மரபுக்கு எதிராகவும், மூடத் தனமாகவும் சிலர் காலில் விழுவ தையும் கண்டிக்க வேண்டும். “அறிவு என்றால் என்ன? அறம் என் றால் என்ன? அறிவால் எழுவது தர்க்க ரீதியான சிந்தனை. யார்  எதைச் சொன்னாலும் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும். பகுத்தறிவால்  உணர்ந்து தெரிந்துகொள்வதுதான் அறிவு. நல்ல மானுடத்தை உரு வாக்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்கி றோம். அறத்தால் எழ வேண்டும். வஞ்சகம் இழைத்து வெற்றி பெறு வது வெற்றி அல்ல. அறிவும் அற மும் சிறந்த கல்வியாளனை, சிறந்த  குடிமகனை உருவாக்கும். அறிவை யும் அறத்தையும் கற்றுக்கொள் வது மனிதனுக்கு நெஞ்சுரத்தையும் சுயமரியாதையையும் அளிக்கும். நெஞ்சை நிமிர்த்தி நிற்பவன்தான் நல்ல குடிமகன்” என்றார்.