வகுப்பு நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார்
சேலம், செப்.2- வகுப்பு நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள் மீது பள்ளி தலைமையாசிரியரிடம் இந்திய மாணவர் சங் கத்தினர் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஆண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் சிலர், தங்கள் வகுப்பு நேரத்தின் போது வகுப்பிற்கு செல்லாமல் இருப்பதும், வகுப்பிற்கு சென்றாலும் பாடம் எடுக்காமல் தான் எடுக்கும் பாடத்தை யூடிப்பில் (youtube) பதிவிட்டு இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்கள். மேலும், சில ஆசிரியர்கள் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் மாணவர்களின் மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். மாணவர்களிடமிருந்து தேர்வுக் கான வினா விடைத்தாள் கட்டணம், பெற்றோர் ஆசிரி யர் கழக கட்டணம் என்ற பெயரில் ரூ.250 முதல் ரூ.500 வரை கூடுதலாக வசூல் செய்து வருவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தினர் பள்ளியின் தலைமையாசிரியரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பவித்திரன், மாவட்ட இணைச்செயலாளர் கோகுல், நிர்வாகிகள் வினோத், அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பணி நியமன விதிமீறல்: மாநகராட்சி செயற்பொறியாளர் பணியிடை நீக்கம்
சேலம், செப்.2- பணி நியமன விதிமீறல் புகார் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை மண் டல செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் செந் தில்குமார். இவர் கடந்த ஆக.31 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட் டார். மாநகராட்சியில் தொழில்நுட்பப் பணியாளர்களாக 6 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் விதிமு றையை மீறி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக செந்தில்குமாருக்கு ஏற்கெனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிலுவை யில் இருப்பதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.