பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு
உதகை, செப்.27- கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பால் சிறு, குறு தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயித்திற்கு தேவை யான தண்ணீர் கிடைக்கபெற் றது. இதனால் மலை காய்கறி உற்பத்தி, தேயிலை உற் பத்தி என விவசாயிகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோத்தகிரி பகுதி யில் நிலவும் ஈரத்தன்மை யால் தேயிலை மகசூல் அதி கரித்துள்ளது. தேயிலைச் செடிகளுக்கு உரமிட்டும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் வந்த நிலையில், இதமான ஈரப்பத கால சூழ் நிலையால் தொழிற்சாலைக ளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தனியார் தொழிற்சாலைகளில் அரசு மானியம் வழங்கப்படாத நிலையில், பசுந்தேயிலை கொள்முதல் விலை கிலோ விற்கு ரூ.18 முதல் ரூ.25 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, செப்.27- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 4 ஆவது நாளாக ஒரே அளவில் நீடித்து வருகிறது. கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக் கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பது மாக இருந்து வருகிறது. அதன்படி, 3 நாட்க ளாக விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளியன்று மாலை 6,500 கனஅடியாக குறைந்தது. இந்நிலை யில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்த காரணத்தால், சனியன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. இத னால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகள் பரி சல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவி, ஆற்றில் குளித்தும் மகிழ்ந்த னர். தமிழக - கர்நாடகா எல்லையான பிலி குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதி காரிகள், நீர்வரத்தை தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.
தனியார் காப்பகத்தில் சிறுவனை தாக்கிய விவகாரம்: விடுதி மூடப்பட்டது
கோவை, செப்.27- தனியார் காப்பகத்தில் சிறுவனை தாக் கிய விவகாரத்தில், காப்பாளர் கைது செய்யப் பட்ட நிலையில், விடுதி மூடப்பட்டு, அங்கு பயின்று வந்த மாணவர்கள் அரசு விடுதிக ளுக்கு மாற்றப்பட்டனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் “கிரேஸ் ஹாப்பி ஹோம் டிரஸ்ட்” தனியார் சிறுவர் காப்பகத்தில் பயின்று வந்த சிறுவனை காப் பாளர் செல்வராஜ் பெல்டால் கடுமையாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியி ருந்தது. இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு, குற்றம் உறுதியா னது. இதையடுத்து, செல்வராஜ் மீது கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காப்பாளர் செல்வராஜ் கைது செய்த னர். மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காப்பகத்திற்கு தடை விதிக்கப்பட்டு, அது மூடப்பட்டது. மேலும், காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த 9 மாணவர்கள், அன் னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள அரசு மாணவர் விடுதிகளுக்கு மாற்றப் பட்டனர். மேலும், பாதுகாப்பு கருதி சில மாண வர்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டனர்.
அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி மோசடி: ஊழியர் கைது
தருமபுரி, செப்.27- அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி நான்கு பேரிடம் பணமோசடியில் ஈடுபட்ட சேலம் வேலை வாய்ப்பக அலுவலக ஊழி யரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட திரு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனி வாசன் (42). பழைய கார்களை வாங்கி விற் பனை செய்து வரும் இவர் உட்பட நான்கு பேரிடம் சேலம், மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (42), ஓமலூர் பகுதி யைச் சேர்ந்த செந்தில்நாதன் (40) ஆகி யோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.40 லட்சம் பெற்றுள்ளனர். இதன் பின் அவர்களிடம் போலி பணி ஆணையை வழங்கியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த ஸ்ரீனிவாசன், தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித் தார். அதன்பேரில், பென்னாகரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த னர். இந் நிலையில், மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ்குமாரை சேலம் குற்றப்பிரிவு போலீ சார் ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் செந்தில் நாதனை பென்னாகரம் காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார், சேலத்தில் வைத்து வெள்ளி யன்று கைது செய்து தருமபுரி கிளை சிறை யில் அடைத்தனர்.