tamilnadu

img

தரம் உயர்த்தப்பட்ட சேகோசர்வ் சங்க ஆய்வகம் திறப்பு

தரம் உயர்த்தப்பட்ட சேகோசர்வ் சங்க ஆய்வகம் திறப்பு

சேலம், ஆக.21- சேலத்தில் தரம் உயர்த்தப்பட்ட  சேகோசர்வ் சங்க ஆய்வகத்தினை அமைச்சர்கள் தா.மோ.அன்பர சன், ரா.ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். சேலம் சேகோசர்வ் சங்கத்தில் வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசி விற்பனையினை தொடங்கி வைத்து, ரூ.2.60 கோடி  மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட சேகோசர்வ் சங்க ஆய்வகத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற் றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந் திரன் ஆகியோர் வியாழனன்று திறந்து வைத்தனர். இதன்பின் அமைச்சர் அன்பரசன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், சேகோசர்வ் சங்க ஆய்வகமானது என்ஏபிஎல் (NABL) அங்கீகாரம் பெற்று ஜவ்வரிசிக்கு 11 தர பரி சோதனைகள் செய்து வருகிறது. தற்சமயம் சேகோசர்வ் சங்க ஆய்வ கமானது இந்திய உணவு பாது காப்பு மற்றும் தரநிலை ஆணையத் தின் (FSSAI) தரத்திற்கு மேம்படுத் தத் தேவையான ஆய்வக மறுசீர மைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு, புதிய உபகரணங்கள் மற்றும்  கருவிகள் ரூ.2.60 கோடி மதிப்பீட் டில் நிறுவப்பட்டு தற்போது திறந்து  வைக்கப்பட்டுள்ளது. சேலம் சேகோசர்வ் சங்கத்தில் ஜவ்வரிசி விற்பனையை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் அனைவரும் எளி தாக வாங்கி பயன்பெறும் வகையி லும் வேதிப்பொருள் கலப்பட மில்லா ஜவ்வரிசி 200 கிராம் பாக்கெட்டுகளின் விற்பனையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், வேதிப்பொருள் கலப் பிடமில்லா ஜவ்வரிசி மற்றும் ஜவ் வரிசி சார்ந்த பிற உணவுப்பொருட் களுக்கான புதிய வர்த்தக முத் திரை பதிவு செய்யப்பட்டு, இண்ட் கோசர்வ் சங்கத்துடன் இணைந்து பிற உணவு வகைகளுடன் ஜவ்வ ரிசி சார்ந்த உணவு வகைகள் தற் போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக 2024-25 ஆம் ஆண்டில், சேகோசர்வ் ரூ. 522.28 கோடி விற்பனை செய்யப் பட்டு ரூ.3.29 கோடி உத்தேச நிகர  லாபத்தை ஈட்டியுள்ளது, என்றார்.  இந்நிகழ்ச்சியில் தொழில் ஆணை யர் மற்றும் தொழில் வணிக  இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், சட்டமன்ற உறுப் பினர் ரா.அருள், சேகோசர்வ் மேலாண் இயக்குநர் கீர்த்தி பிரிய தர்ஷினி, துணை மேயர் திருமதி மா. சாரதாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மரவள்ளி விவசாயிகளுடன் செப்.2 இல் முத்தரப்பு கூட்டம்

சேலத்திற்கு வருகை தந்த அமைச்சர் த.மோ.அன்பரசனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மனு ஒன்றை அளித்தனர். அதில், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் விலை, கடந்தாண்டு வீழ்ச்சியில் இருந்தது. இந்தாண்டு தற்போது அறுவடை துவங்க வுள்ளது. எனவே விரைவாக முத்தரப்பு கூட்டம் நடத்தி, இந்தாண் டுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.10  ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் குறைந்தபட்ச விலையாக முறையே ரூ.4500, ரூ.3500 கிடைத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதைய டுத்து சங்கத்தின் நிர்வாகிகளிடம் விபரங்களை கேட்டறிந்த அமைச்சர்  அன்பரசன், செப்.2 ஆம் தேதியன்று சேலத்தில் அமைச்சர் ரா.ராசேந்தி ரன் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெறும் என அறி வித்தார். இந்நிகழ்வில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர் ஏ.அன்பழகன், பொருளாளர் வெங்கடா ஜலம், துணைத்தலைவர் பி.தங்கவேலு, துணைச்செயலாளர் ராஜேந் திரன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.அரியாக்க வுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.