துப்பாக்கி வைத்த புடைப்புச் சிற்பங்கள் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் தகவல்
உடுமலை, ஏப். 22 – உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் துப்பாக்கி வைத்த புடைப் புச் சிற்பங்கள் காணப்படுவது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள் ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் ஆய்வாளர்கள் கூறுகையில், உடும லைப் பகுதிகளான கொங்கலக்குறிச்சி, பண்ணைக்கிணறு, ஜிலேப்பநாயக்கன் பாளையம், திருமூர்த்தி மலை, புதுப்பா ளையம், நல்லாம்பள்ளி, துங்காவி, மெட்ராத்தி, கடத்தூர், காரத்தொழுவு போன்ற இடங்களில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் கூடிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பல ஆண்டுக ளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில், மேற்குத் தொடர்ச்சி மலை யின் தளிஞ்சி மலைப்பகுதியில் துப்பாக் கித் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த தொழிற் சாலையின் எச்சங்களாகவே இந்த துப்பாக்கி புடைப்புச் சிற்பங்கள் இருக்க லாம். மேலும், இப்பகுதியில் தளி எத்த லப்ப மன்னன் ஆட்சி செய்ததற்கான வலுவான சான்றுகள் உள்ளன. இருப்பி னும், 1800-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும், மருது சகோதரர்க ளுக்கும் இந்த தளிஞ்சி பகுதியில் இருந் துதான் துப்பாக்கிகள் அனுப்பப்பட்டதா கவும் கூறப்படுகிறது. திருமூர்த்தி மலை மற்றும் ஏழுமலையான் கோவிலில் எத் தலப்ப மன்னருக்கு இன்றும் முதல் மரி யாதை வழங்கப்படுவது இதற்கு சான் றாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக் கும் மேலாக இந்த துப்பாக்கி புடைப் புச் சிற்பங்களை ஆய்வு செய்த உடு மலை வரலாற்று ஆய்வாளர்கள், சென்னை ஆவணக்காப்பகத்தின் ஆவ ணங்களின்படி விருப்பாட்சி கோபால நாயக்கர் தலைமையில் இயங்கிய தீப கற்ப கூட்டணியானது ஆங்கிலேய அர சுக்கு ஆயுதம் சார்ந்த நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதை உறுதிப்படுத்து கின்றனர். இது தளிஞ்சி மலைப்பகுதி யில் துப்பாக்கித் தொழிற்சாலை இருந்த தையும் சுட்டிக்காட்டுகிறது. இங்கு ஆயுத உற்பத்தி இருந்த காரணத்தி னால்தான், ஆங்கிலேயப் படைகள் இப் பகுதியில் நிரந்தரமாகத் தங்கினர். இதன் எச்சமாகவே இன்று அமராவதி நகரில் படைத்துறைப் பள்ளி (இராணு வப் பள்ளி) அமைந்திருக்கலாம். மேலும், கள ஆய்வுகளின் மூலம் கரிக் காரன்புதூர், நெய்க்காரப்பட்டி சித்த ரேவு, காவளப்பட்டி, பாப்பம்பட்டி போன்ற பகுதிகளில் நுணுக்கமான இரும்புப்பட்டறை தொழிற்சாலைகள் இயங்கி வந்ததும், கடந்த நூற்றாண்டு களுக்கு முன்பு வரை துப்பாக்கித் தொழிற்சாலை இருந்ததும் தெரிய வரு கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை உடுமலையில் அரசு அனு மதி பெற்ற துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்ததாகவும் அவர் கள் தெரிவித்தனர்.