tamilnadu

img

அவிநாசி வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலர்கள் தர்ணா - பத்திரிகையாளர்கள் அவமதிப்பு

அவிநாசி, ஜன. 2- அவிநாசி ஒன்றியம் பெரியாயி பாளையம் வாக்கு எண்ணும் மையத் தில் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்படாத தால், பணியில் இருந்த அரசு அலுவ லர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும் அவமதிப்பு செய்த தால் செய்தியாளரும் தர்ணாவில் ஈடுபட்டார். அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட் சித் தலைவர்கள், 270 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக் கான தேர்தல் திங்களன்று நடைபெற் றது. 58,607 ஆண் வாக்காளர்கள், 60,445 பெண் வாக்காளர்கள், 8 திரு நங்கைகள் என மொத்தம் 1,19,060 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் மொத்தம் 74.17 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இதற்காக 195 வாக்குச் சாவடிகள், 400 வாக்குப் பெட் டிகள் பயன்படுத்தப்பட்டன.  இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை பெரியாயி பாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற் றது. வாக்குச் சீட்டுக்கள் வகைப் பிரித்தல், மாவட்ட ஊராட்சி உறுப் பினர்களுக்கான வாக்கு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான வாக்கு, ஊராட்சி தலைவர்களுக்கான வாக்கு, ஊராட்சி வார்டு உறுப்பினர் களுக்கான வாக்கு என வாக்கு எண் ணும் பணிக்காக தேர்தல் அலுவலர் கள், உதவி தேர்தல் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் 540 பேரும், பாது காப்புப் பணிக்காக 300க்கும் மேற் பட்ட காவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.   இவர்கள் காலை 8 பணிக்கு பணியைத் தொடங்க இருந்த நிலை யில், உணவு, குடிநீர் உள்ளிட்ட எவ் வித ஏற்பாடுகளும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்து தரப்படவில்லை. மேலும் போதுமான கழிப்பிட வசதி களும் ஏற்படுத்தப்படவில்லை. இத னால் ஆவேசமடைந்த அரசு அலு வலர்கள் வாக்கு எண்ணும் மைய மைதானத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரனை அரசு அலுவலர்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது, இரு கட்டமாக நடை பெற்ற தேர்தல் பணியில் ஆரம்பத்தி லிருந்தே ஈடுபட்டு வருகிறோம். இதில் ஒரு சிலர் உடல் நிலை பாதிக்கப்பட்ட வர்களும், தொடர்  சிகிச்சையில் உள் ளவர்கள் கூட உள்ளனர். இந்த நிலை யில் இப்பணிக்கு வந்துள்ள எங்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பிட வசதி உள் ளிட்ட எவ்வித வசதியும் செய்து தரா மல்,  காலை 8 மணிக்கு பணி தொடங்க வேண்டும் என்று சொன்னால் எவ் வாறு இயலும். ஆகவே, அடிப்படை வசதி செய்து கொடுத்தால் பணியை விரைவில் தொடங்குவோம் என்ற னர். இதையடுத்து தேர்தல் அலுவ லர்கள், காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக  அனைத்து வசதிகளும் செய்து தரப் படும் எனத் தெரிவித்தனர். இதைய டுத்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டிருந்த அரசு அலுவலர்கள் வாக்கு எண்ணும்  பணிக்கு திரும்பினர். இத னால் ஒரு மணி நேரம் காலதாமதமாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 

செய்தியாளர் தர்ணா

இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்தில், செய்தியாளர்கள் உள்ளே செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு அனுமதி அட்டை  வழங்கப்பட் டிருந்தது. வாக்கு எண்ணும் மைய   நுழைவாயிலிலேயே செய்தியாளர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப் பட்டனர்.  அரசு அலுவலர்கள் தர்ணா முடிந்து,  வாக்கு எண்ணும் மையத்தில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த சன் டிவி செய்தியாளர் குமரவேல் என்பவரை,  அங்கிருந்த தேர்தல் அலு வலர்  மரியாதைக் குறைவாகப் பேசி, அவரிடம் இருந்த இரு செல்போன் களை பறித்துச் சென்றனர். இதனால் ஆவேசமடைந்த செய்தியாளர் வாக்கு எண்ணும் மைய அறையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில், தேர் தல் அலுவலர்கள் செல்போனை செய்தியாளரிடம் திருப்பி வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர் தனது தர்ணா போராட்டத்தைக் கைவிட் டார். இச்சம்பவம் அங்கிருந்த செய் தியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்டுத்தியது. இதேபோல் உடுமலை ஒன்றியத் தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்காதை கண்டித்து நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கையை அலுவலர்கள் புறக்கணித்தனர். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிகை நிறுத்தப் பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
 

;