விளைநிலங்களை சேதப்படுத்தி தாக்கும் காட்டுப்பன்றிகளை வனத்துறை சுட்டுப்பிடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை,செப்.18- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிக ளில் காட்டுப்பன்றிகளால் கடும் இன்ன லுக்கு ஆளாகி வரும் விவசாயிகள், மற்ற மாநிலங்களை போல காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆனைமலை புலி கள் காப்பக துணை இயக்குனர் அலுவ லகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர். உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் ராஜேஷ் தலைமையில், விவசாயிக ளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசா யிகள், வனச்சரக அலுவலர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசா யிகள் தங்கள் கோரிக்கைகளைப் பேசி னர். மௌனகுருசாமி: வனப்பகுதியில் இருந்து 30 கி.மீ தள்ளி உள்ள குடிமங் கலம் மற்றும் உப்பாறு ஓடைப்பகுதி வரை காட்டுப்பன்றிகளால் விவசாயிக ளுக்கு தொல்லை ஏற்படுகிறது தமிழ கத்தில் மட்டுமே காட்டுப்பன்றிகளை கட் டுப்படுத்த நடவடிக்கை இல்லை. விவசாயிகள் ஆண்டுக் கணக்கில், பல முறை இதுகுறித்து வனத்துறையின ரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் இப்பகுதியில் 15 ஆயி ரம் ஹெக்டேர் அளவில் தென்னை விவ சாயம் நடைபெறுகிறது. மயில்களாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மயில்களைப் பிடித்து வனத்துக் குள் விட வேண்டும். உடுமலை மூணாறு சாலையில், வனப்பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை வனத்துறை சோதனை சாவடியில் முறையாக சோதனை செய்ய வேண் டும் என்றார். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகை யில், சோதனைச்சாவடிகளில், முறை யான ஆவணங்கள் வைத்திருக்கும் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க படுகிறது, பணியை கண்காணிக்க சிசி டிவி கேமரா மற்றும் ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். உடுக்கம்பாளையம் பரமசிவம்: வனச்சட்டங்களால், விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். யானைகள் வனப்பகுதியை ஒட்டி யுள்ள விளைநிலங்களை மட்டுமே சேதம் செய்து வருகின்றன. ஆனால் காட்டுப்பன்றிகள் வனத்தில் இருந்து 30 - 40 கி.மீ. தூரத்தில் உள்ள விவசாய நிலங் களில் கூட்டமாக தங்கி விவசாயிகள் மற் றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின் றன. எனவே மற்ற மாநிலங்களை போல அவற்றை சுட்டுப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட் டத்தில் உள்ள அனைத்து வனச்சரங்க ளில் இருந்தும் அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார். சின்னு: கல்குவாரி அமைக்க வனத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்ற முழு மையான வழிகாட்டல் வழங்க வேண் டும். விவசாயிகள் கிணறு தோண்ட வனத்துறை அனுமதி பெற வேண்டுமா? அதற்கான வழிமுறைகளை கூற வேண் டும் என்றார். கோபால். விவசாயிகளுக்கு வனவி லங்குகளால் ஏற்படும், பயிர் இழப்பீடு தொகை 2014 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகி றது. உதாரணமாக சேதமாகும் தென் னைக்கு ரூ.500 மட்டுமே வழங்கப்படுகி றது. எனவே தற்போதைய சூழ்நி லைக்கு தகுந்தவாறு பயிர் பாதிப்புக்கு நிவாரணம் நிர்ணயித்து உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பகலில் மயிலையும், இரவில் காட்டுப் பன்றிகளையும் விரட்டுவதே வேலை யாக உள்ளது. எப்படி விவசாயம் செய் வது? யானையை விரட்ட தனிக்குழு அமைக்க வேண்டும் என்றார். செல்வராஜ்: வனங்களை பாது காக்க வேண்டும். அதேபோல் விவசாயி களை மனிதனாக மதிக்க வேண்டும். வனவிலங்குகளை முழுமையாக கட் டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயம் அழிந்துவிடும். எனவே வனத்தை காப்பாற்றுவது போல், எங்கள் விவசாய நிலத்தையும் மனிதநேயத்துடன் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றார். ஜெகதீசன்: கடந்த கூட்டங்களில் விவசாயிகள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் எத்தனை தீர்மானங் களை அரசுக்கு அனுப்பி வைத்தீர்கள். அதற்கு என்ன தீர்வு கிடைத்துள்ளது. ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும் அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறீர்கள். இதுவரை எதற்கு தீர்வு கிடைத்துள்ளது? உடுமலை வனச்சரகம் பொன்னாலம்மன் சோலை, பாண்டியன் கரடு உள்ளிட்ட பகுதிகளில் யானை நடமாட்டம் அதிக மாக உள்ளதால், அந்த பகுதியில் முதற் கட்டமாக சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பு வேலி அமைத்து தர வேண்டும் என்றார்.