tamilnadu

img

போக்குவரத்து பணிமனை நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து பணிமனை நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.10- போக்குவரத்து கழக பாலக் கோடு பணிமனை நிர்வாகத்தை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கு, அவர்களுக்கான இருக் கையை நடத்துநர்கள் ஒதுக்கி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கண்ணியமாக நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஏறும், இறங் கும் இடங்களில் பேருந்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாலக்கோடு பணிமனை நிர்வா கத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பாலக்கோடு பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் வட்டத் தலை வர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.ஜி.கரூரான், செயலாளர் எம். மாரிமுத்து, பொருளாளர் தமிழ் செல்வி, வட்டச் செயலாளர் ஜி. மாதேசன், பொருளாளர் விஜயா, மாவட்டக்குழு உறுப்பினர் காரல்  மார்க்ஸ் ஆகியோர் கண்டனவுரை யாற்றினர். இதில் வாலிபர் சங்க  மாவட்ட துணைத்தலைவர் வி.ரவி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.