tamilnadu

img

நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் ஆரம்பகட்ட பணிகளை துவங்கிட சிபிஎம் மனு

நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் ஆரம்பகட்ட பணிகளை துவங்கிட சிபிஎம் மனு

உதகை, ஜூலை 3- நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கக்  கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் நெல்லியாளம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நக ராட்சிக்குட்டபட்ட புளியம்பாறை கிராமத்தி லிருந்து ஆமைக்குளம் கல்லூரியை இணைக் கக்கூடிய நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியும் தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், பாலம் அமைக்க ஆரம்ப  கட்டபணிகளை உடனடியாக தொடங்க  வேண்டும்என்று கோரிக்கை அடங்கிய  மனுவை வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நெல்லியாளம் நக ராட்சி ஆணையர் (பொ) சுவிதாவிடம் அளித்த னர்.  இந்த மனு அளிக்கம் நிகழ்வில், கட்சியின் மூத்த தோழரும், விவசாய சங்க மாவட்டத் தலைவருமான என்.வாசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.குஞ்சு முகம் மது, மாவட்டக் குழு உறுப்பினர் இராசி இரவிக் குமார், புளியம்பாறை கிளை செயலாளர் சுபைர், வாலிபர் சங்க மாவட்டப் பொருளா ளர் நௌபல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.