tamilnadu

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மேட்டுப்பாளையம், ஆக.13- ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் வழங்கக்கோரி, காரமடை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் வட்டம், காரமடை நகராட்சி யில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இங்கு மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் 98 பேர் ஒப்பந்த அடிப்படையில் நகர தூய்மைப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்க ளுக்கு நாள்தோறும் ரூபாய் 606 வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில், இவர்களுக்கு ரூபாய் 502 என நிர்ண யிக்கப்பட்டு பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தம் போக என ரூ.442 மட்டுமே வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தொகை தங்க ளுக்கு போதவில்லை என்றும் சம்ப ளத்தை உயர்த்தித்தர வேண்டும் என  கோரிக்கையை முன் வைத்து புத னன்று தூய்மைப் பணியாளர்கள் தங்க ளுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண் டும் எனக்கூறி நகராட்சி வளாகத்திற் குள் அமர்ந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். நகராட்சி ஆணையர் மதுமதி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய் மைப் பணியாளர்களுடன் பேச்சு  வார்த்தை நடத்தி, உங்களது கோரிக் கைகள் உயர் அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும் என கூறி யதை பணியாளர்கள் ஏற்கவில்லை. இதனால் காரமடை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை எடுக்கப்படாமல் உள்ளது. உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் தூய்மைப் பணியா ளர்களுக்கு ஊதிய உயர்வு பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு  காண வேண்டியது அவசியம் என கார மடை பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டம்,  கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட 10  கிராம ஊராட்சிகளிலும் தூய்மைப்  பணியாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். இவர்கள் கடந்த 10 ஆண்டுக ளுக்கு மேலாக தூய்மைக் காவலர் கள் என்ற பெயரில் பணியாற்றி வரு கின்றனர். மாத ஊதியமாக தலா ரூ.2 ஆயிரத்து 600 மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.5 ஆயிரம் வழங் கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளில் வழங்கப்படுவதைப்  போல ஊதியம் வழங்கப்படுவ தில்லை. எந்தவிதமான சட்ட பாது காப்பும் இன்றி பணியாற்றி வருகி றார்கள். தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவக்காப்பீடு வேண்டும் என புதனன்று மொடக் குறிச்சி வட்டம், கொம்பனைபுதூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டா லின்’ திட்ட முகாமில் ஈரோடு மாவட்ட தூய்மைக் காவலர்கள் சங்க ஒருங்கி ணைப்பாளர் கே.பி.கனகவேல் தலை மையில் ஏராளமானோர் மனு அளித்த னர்.