அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் தீண்டாமையை கடைப்பிடிப்பதாகப் புகார்
ஈரோடு, செப்.30- அந்தியூர் பேரூராட்சி நிர்வா கம் தீண்டாமையை கடைப்பிடிப் பதாகப் புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் பல்வேறு பகுதிக ளில் மாட்டிறைச்சி கடைகள் நடத் தப்படுகிறது. இவர்களுக்கு அவ் வப்போது இந்துத்துவ அமைப்பி னர் மிரட்டல் விடுத்து வருகின்ற னர். இதுகுறித்த புகார்கள், முறை யீடுகளைத் தொடர்ந்து புதிதாக கட்டப்படும் வாரச்சந்தையில் ஆடு, கோழி இறைச்சி கடைகள் போல மாட்டிறைச்சி விற்பனைக் கும் கட்டடம் கட்டி ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அந்தியூர் வாரச்சந்தை கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந் துள்ளது. ஆனால், பல மாதங்களா கியும் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி வாக்குறுதிக்கு மாறாக, பேரூராட்சி மன்றத்தில் மாட்டிறைச்சிக்கு மட்டும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது உண்ணும் உண வில் சாதி பார்ப்பதும், தீண்டாமை யை கடைப்பிடிப்பதும் ஆகும். எனவே, அந்தியூர் பேரூராட்சி நிர் வாகத்தைக் கலைக்க வேண்டும். உடனடியாக நிர்வாகிகள் மீது எஸ்சி,எஸ்டி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சி யர் நேரடியாக தலையிட்டு அந்தி யூர் வாரச்சந்தையில் மாட்டி றைச்சி விற்பனைக்கு கடை ஒதுக் கீடு செய்ய வேண்டும் என வலி யுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட வரு வாய் அலுவலரிடம் மனு அளிக்கப் பட்டது.
பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
உதகை, செப்.30- சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர் ஜெகதீஷ்குரா. இவரது மனைவி சிமாதேவி (35). இவர் களுக்கு 2 பெண், 1 ஆண் குழந்தைகளுடன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, மாமரம் பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிமாதேவி காணாமல் சென்ற தாக, கோத்தகிரி காவல் நிலையத்தில் ஜெகதீஷ்குரா புகார ளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிமா தேவியைத் தேடி வந்தனர். இந்நிலையில், மாமரம் பகுதியி லுள்ள தேயிலைத் தோட்டத்தில் பெண்ணின் சடலம் கிடப்ப தாக போலீசாருக்கு திங்களன்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று போலீசார் ஆய்வு செய்ததில், உயிரிழந்து சிமாதேவி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை
நாமக்கல், செப்.30- குமாரபாளையத்தில் குழு கடனை திரும்ப செலுத்த முடியாத விரக்தியில் கூலி தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள ஏரி தெரு முத்து என்பவரின் லைன் வீட்டில் வசிப்பவர் அப்புசாமி. இவருக்கு திருமணமாகி பிரேமா என்ற மனைவியும், அஜய் என்ற மகனும் மற்றும் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். தனது மகள் பவித்ராவின் திருமணத்திற்காக அப்புசாமி மகளிர் குழுக்களில் கடன் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக கடனை திருப்பி செலுத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக ஜவுளிக் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள சூழ்நிலையில், தற்பொழுது குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழில் ஒரு வாரம் விடுமுறை ஒரு வாரம் தொழில் என செயல்படுவதால் அப்புசாமியால் மகளிர் குழுக்களில் பெற்ற கடன் தவணைத் தொகை செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக மகளிர் குழு கடன் வசூலிப்பாளர்கள் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளில் பேசுவதால் தன்னால் பணம் திரும்ப செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் மனமுடைந்தார். இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலை தனது மனைவியின் சேலையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் அப்புசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்புசாமி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.