tamilnadu

img

கோவை: சாதி, மதம் குறித்து கேட்க கூடாது! - தனியார் பள்ளிகளுக்கு கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவரப் படிவத்தில் சாதிமதம் குறித்து கேட்க கூடாது என கோவையில் உள்ள 9 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர்களுக்கு கோவை மாவட்டக் கல்வி அலுவலர் அனுப்பியுள்ள கடிதம் பின்வருமாறு;

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் வித்யவிகாஸ் மெட்ரிக் பள்ளி, எஸ்பிஏஓ மெட்ரிக் பள்ளி, எஸ்எஸ்விஎம் மெட்ரிக் பள்ளி, வேல் இன்டர்நேசனல் பள்ளி, நாகினி வித்யாலயா, வித்யா நிகேதன், சின்மயா வித்யாலயா, தசரதன் இன்டர்நேஷனல் பள்ளி, அவிலா கான்வென்ட் ஆகிய 9 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவரப் படிவத்தில் சாதிமதம் சார்ந்த விவரத்தினை குறிப்பிடுவதாக புகார் மனு பெறப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் அறிவியல் முன்னேற்றமடைந்துள்ள இக்காலத்திய குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக உள்ள சாதி, மதம் சார்ந்த அடையாளங்களை பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவரப் படிவத்தில் இக்கல்வி ஆண்டு முதல் (2023-2024) குறிப்பிடக்கூடாது என மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;