tamilnadu

img

மின்ஊழியர் மத்திய அமைப்பின் கோவை, உடுமலை மாநாடு

மின்ஊழியர் மத்திய அமைப்பின் கோவை, உடுமலை மாநாடு

கோவை, ஜூலை 7- மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை தெற்கு வட்ட  மற்றும் உடுமலை வட்ட மாநாடு நடைபெற்றது. சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் கோவை தெற்கு வட்ட 18 ஆவது மாநாடு ஞாயிறன்று, தெற்கு  வட்டத் தலைவர் பி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் துவக்கவுரை யாற்றினார். வட்ட கிளைச் செயலாளர் என்.ரத்தினகுமார், பொருளாளர் கே.பத்மநாபன் ஆகியோர் அறிக்கைகளை  முன்வைத்தனர். மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் சிறப் புரையாற்றினார். சிமெண்ட் அண்ட் பொதுத்தொழிலாளர் சங் கச் செயலாளர் எம்.பஞ்சலிங்கம், வடக்கு செயலாளர் எம். மணிகண்டன், ஓய்வுபெற்றார் நல அமைப்பு மண்டலச் செய லாளர் பி. விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இம்மாநாட்டில், சங்கத்தின் தலைவராக பி.காளிமுத்து, செய லாளராக என்.ரத்தினகுமார், பொருளாளராக டி.பழனிசாமி உட்பட 24 பேர் கொண்ட தெற்கு வட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாநிலச் செயலாளர் சி. ஜோதிமணி நிறை வுரையாற்றினார். முடிவில், கே.சுந்தரவடிவேல் நன்றி கூறி னார். இதேபோல, மின் ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளை 13 ஆவது மாநாடு, ஞாயிறன்று தோழர் எச்.சுப்பிர மணியன் நினைவரங்கத்தில், கிளைத் தலைவர் எஸ்.ஜெகானந்தா தலைமையில் நடைபெற்றது. சிஐடியு ஒருங் கிணைப்புக்குழு தலைவர் வி.விஸ்வநாதன் துவக் கவுரையாற்றினார். செயலாளர் கோவிந்தன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். சிஐடியு துணைத்தலைவர் எஸ்.ஜெகதீசன், மின் ஊழியர் ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி கிருஷ் ணகுமார், மின் ஊழியர் சங்க மண்டலச் செயலாளர் டி. கோபல கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக எஸ்.ஜெகானந்தா, செயலாளராக ஆர்.கோவிந்தன், பொரு ளாளராக ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.