tamilnadu

img

நலவாரிய உதவிகளை உயர்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்

       நலவாரிய உதவிகளை உயர்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 6- நலவாரிய உதவிகளை உயர்த்தி வழங்க வேண்டும் என சிஐ டியு ஆட்டோ தொழிலாளர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தருமபுரி மாவட்ட கே. எம்.ஹரிபட் ஆட்டோ ஓட்டுநர் மற் றும் தொழிலாளர் சங்கத்தின் 6 ஆம்  ஆண்டு பேரவைக் கூட்டம், சிஐடியு  தருமபுரி மாவட்டக்குழு அலுவல கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என்.வரதரா ஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவகுரு அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.ராஜகோபால் அறிக் கையை முன்வைத்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நாகரா சன், போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சண் முகம், பொதுச்செயலாளர் ஆர்.ரகு பதி, துணைத்தலைவர் சி.முரளி,  சாலை போக்குவரத்து சங்க மாவட் டச் செயலாளர் ஆனஸ்ட்ராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.  இக்கூட்டத்தில், புதிய மோட் டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். ஆன் லைன் அபராத முறையை முற்றிலு மாக கைவிட வேண்டும். எப்சி கட்ட ணம், இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண் டும். ஆட்டோ தொழிலாளர் நலவா ரிய உதவித்தொகைகளை உயர்த்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஆட்டோக்களுக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து கொடுக்க வேண்டும். வீட்டுவசதியில்லா ஆட்டோ தொழிளார்களுக்கு இல வச வீட்டுமனை பட்டா வழங்க  வேண்டும். புதியதாக துவங்க வுள்ள சிப்காட்டிற்கு ஆட்டோ ஓட்டு நர்களின் குழந்தைகளுக்கு படிப் பிற்கு தகுந்தாற்போல், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க  வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ்.ராஜ கோபால், மாவட்டச் செயலாளராக என்.வரதராஜன், பொருளாளராக ஜி.சிவகுரு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாவட்ட நிர்வாகி முனிகிருஷ்ணன் நன்றி கூறினார்.