தொழில் அமைதி காக்க கோரி சிஐடியு மனு
ஈரோடு, ஆக.4- சிஐடியு ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொழில் அமைதி காக்க நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். அம்மனுவில், ஈரோடு மாநகரம், அண்ணமார் பெட் ரோல் பங்க் அருகில் வாய்க்காலை ஒட்டிய பகுதியில் சிஐ டியு ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்துத் தொழிலா ளர் சங்கம் என்ற பெயரில் ஸ்டேண்ட் அமைத்து கடந்த 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் 9 பேர் மினி லாரி வைத்து தொழில் செய்து வருகின்ற னர். போக்குவரத்திற்கு இடையூறின்றி பொதுமக்க ளுக்கு சேவையளித்து வருகின்றனர். இந்நிலையில் அசோக்குமார் என்பவர் சிறிய ரக சரக்கு வாக னத்தை அந்த ஸ்டேண்டில் கொண்டு வந்து நிறுத்தி யுள்ளார். இதுமினி லாரி நிறுத்தும் பகுதி. உங்கள் வாக னத்தை 500 மீ தள்ளி நிறுத்துங்கள் என அந்த ஸ்டேண் டிற்குட்பட்டவர்கள் கூறியுள்ளனர். இதனை அசோக் குமார் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்தோம். இதனடிப்படையில் விசா ரித்த காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பினர். ஆயினும் அவர் வாகனத்தை அப்புறப்ப டுத்தவில்லை. இதனால் தொழில் அமைதி கெடும் சூழல் நிலவுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண் டும் என மனு அளித்தனர். இதில், மாவட்டச் செயலா ளர் பி.கனகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.