tamilnadu

img

சிஐடியு ஆட்டோ சங்கப் பேரவை

சிஐடியு ஆட்டோ சங்கப் பேரவை

உதகை, ஜூலை 28- 35 கிலோமீட்டர் சுற்றளவில் போய் வருவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட சிஐடியு ஆட்டோ சங்கம் பேரவை வலியுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் சிஐடியு ஆட்டோ சங்கம் பேரவை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு யோகேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு ஆட்டோத் தொழிலாளர் சம்மேளன மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.முருகன் சிறப்புரையாற்றினார். இதில், நீலகிரி மாவட்டத்தில் இயக்கக்கூடிய ஆட்டோக்கள் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் தான் போய் வர வேண்டும் என்பதனை மாற்றி இதர மாவட்டங்களில் இருக்கக்கூடிய 35 கிலோமீட்டர் சுற்றளவில் போய் வருவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்பேரவை கூட்டத்தில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் ஆலோசகராக சி.வினோத், மாவட்ட தலைவராக இளங்கோவன், பொதுச் செயலாளராக ஆல்வின் பிரிட்டின், பொருளாளராக நசீர் மற்றும் 10 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.