குழந்தை இல்லாத ஏக்கமும் கடன் சுமையும் விசைத்தறி தொழிலாளி தம்பதியர் தற்கொலை
கோவை, செப்.13- சூலூர் அருகே உள்ள செங்கத்துறை கிரா மத்தில், கடன் தொல்லை மற்றும் குழந்தை இல்லாத மன வருத்தத்தால் விசைத்தறி தொழிலாளி தம்பதியர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செங்கத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டவர், 20 ஆண்டுகளுக்கு முன் மணி மேகலை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் விசைத்தறி தொழிலா ளர்களாக, சூலூர் அருகே உள்ள மணி என்ப வரது விசைத்தறி கூட்டத்தில் வேலை செய்து வந்தனர். அவர்கள் உரிமையாளரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பெற்று பணி யில் ஈடுபட்டிருந்தனர். திருமணத்திற்குப் பிறகு குழந்தை இல் லாததால் தம்பதியர் நீண்ட காலமாக மன உளைச்சலுக்கு ஆளாக இருந்தனர். இதற்கு மேலாக, பல்வேறு நபர்களிடமிருந்து கடன் வாங்கியதால், அதை திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இந்தப் பிரச்னைகளால் விரக்திய டைந்த ஆண்டவர் மற்றும் மணிமேகலை, சனி யன்று அதிகாலை வீட்டில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சி மருந்து குடித்து தற் கொலை செய்துகொண்டுள்ளனர். நெடு நேரம் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தே கம் அடைந்த அருகில் வசிப்பவர்கள், கத வைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, ஆண்டவர் தரையில் படுத்தபடியும், மணிமேகலை சேரில் அமர்ந்தபடியும் உயிரி ழந்த நிலையில் கிடந்தனர். இதுகுறித்து உடன டியாக சூலூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களை யும் கைப்பற்றினர். உடல்கள் கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் வழியாக கொள்ளேகால் செல்ல தடை
ஈரோடு, செப். 13- கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட் டம், ஹனூர் வட்டம், கொள்ளேகால் - செல் லம்பாளையம் சாலையில் நால்ரோடு முதல் கர்கேகண்டி வரை சாலைப் புனரமைப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் பர்கூர் வழியாக கொள்ளேகால் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை புனரமைப்புப் பணிகள் நடைபெறு வதால் வரும் 15 ஆம் தேதியன்று முதல் 25 ஆம் தேதி வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட கன ரக வாகனங்களை தற்காலிகமாக அனு மதிக்க முடியாது. எனவே கனரக வாகனங் கள் கொள்ளேகாலுக்கு செல்ல அம்மா பேட்டையிலிருந்து வெள்ளித்திருப்பூர், அந்தியூர், அத்தாணி, சத்தியமங்கலம், பண் ணாரி வழியாக சாம்ராஜ் நகரை அடையலாம். பவானியிலிருந்து ஆப்பக்கூடல், கவுந்த பாடி, சத்தியமங்கலம், பண்ணாரி வழியாக வும், பெருந்துறையிலிருந்து திங்களூர், கொளப்பலூர், மாக்கினாங்கோம்பை, சத்தி வழியாக சாம்ராஜ் நகரை அடையலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.