போதிய விற்பனை இல்லாததால் சாலையோரங்களில் விட்டு செல்லப்பட்ட வாழைக்கன்றுகள்
திருப்பூர் , அக்.2- திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைக்கன்றுகள் வரத்து அதிகரித்திருந்ததாலும், போதிய விற்பனை இல்லாததாலும் சாலையோரங்களில் வியாபாரிகள் விட்டு சென்றனர். திருப்பூரில் கடந்த திங்கட்கிழமை முதலே, குன்னத்தூர், சத்தியமங்க லம், பெருந்துறை, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைக் கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இவை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையம் சந்தை பகுதி, திருப்பூர் அரிசி கடை வீதி, பூ மார்க்கெட் பகுதி, பெரியகடை வீதி, புது மார்க்கெட் வீதி, புஷ்பா ரவுண்டானா, அனுப்பர்பா ளையம் என பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்யப்பட் டன. ஜோடி ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு வரத்து அதிகரித்திருந்த தால், ஏராளமானோர் வாழை கன்று களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லாமல், வியாழனன்று விலை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டன். இருப் பினும் வியாபாரம் ஆகாத வாழைக் கன்றுகளை சிலர் மீண்டும் கொண்டு சென்றனர். சில வியாபாரிகள் வாடகை செலவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு மீதமான வாழைக்கன்றுகளை எடுத்துச் செல் லாமல் விற்பனை செய்த இடங்களி லேயே விட்டு சென்றனர். இதனால் ஆங்காங்கே தேங்கிய வாழைக்கன் றுகளை மாநகராட்சி ஊழியர்கள் அப் புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டி கைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட செவ்வந்தி பூக்கள் பல் வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. காலை வரை இறுதி கட்ட விற்பனை நடைபெற்ற நிலையில் விற்பனையாகாத செவ் வந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக் கள் பூ மார்க்கெட் பகுதிக்கு பின்பு றம் மொத்தமாக கொட்டப்பட்டுள் ளன என வியாபாரிகள் வேதனை யுடன் தெரிவித்தனர்.
