tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்க அந்தியூர் மாநாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க அந்தியூர் மாநாடு

ஈரோடு, ஜூலை 20- மாற்றுத்திறனாளிகள் சங்க அந்தியூர் தாலுகா மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா 5 ஆவது மாநாடு, ஸ்ரீலட்சுமி திரு மண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி தலைமை வகித்தார். பி.ஆறுமுகம் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து துவக்கவு ரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன், விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க மாநில உதவித்தலைவர் எல்.பரமேஸ்வரன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வி.ராஜூ, சிஐ டியு நிர்வாகி ஆர்.முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி, கட்டுமான சங்க தலை வர் ஆர்.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில் சங்கத்தின் தாலுகா தலைவராக டி.சாவித்திரி, செயலாளராக பி.முருகன், பொருளாளராக தமிழரசு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் நிறைவுரையாற்றினர். கே. அன்னக்கொடி நன்றி கூறினார்.