tamilnadu

img

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப். 22- பணி நிரந்தரம், பென்சன், பணிக் கொடை வழங்கிட கோரி தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வரு கிறது. இத்திட்டத்தில் பணியாற் றும் ஊழியர்களும், உதவியாளர்க ளும் இதுநாள் வரை நிரந்தரம் செய்யவில்லை. இந்த திட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கைம்பெண்கள், பெரும் பான்மையோர் பணியாற்றி வரு கிறார்கள். வளர்இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக் காக பாடுபடும் அங்கன்வாடி ஊழி யர்கள் பணி நிரந்தரம், முறையான  குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனவே  அங்கன்வாடி ஊழியர், உதவியா ளர்களை அரசு ஊழியராக்க வேண் டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண் டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூ.10-லட்ச மும் உதவியாளருக்கு ரூ. 5 லட்ச மும் வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் டி. சுமதி தலைமை வகித்தார். சிஐடியு மாநில  செயலாளர் சி. நாகராசன், மாவட்ட  இணை செயலாளர் ஏ. சேகர், அங் கன்வாடி ஊழியர் சங்க மாநில செய லாளர் எம். லில்லிபுஷ்பம், மாவட் டச் செயலாளர் சி.கவிதா, பொருளா ளர் என்.தெய்வானை ஆகியோர் உரையாற்றினர். சேலம் சிஐடியு தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தினர் சேலம் கோட்டை  மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் அ. மனோன்மணி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு  மாவட்டப் பொருளாளர் வீ.  இளங்கோ, ஆட்டோ தொழிலாளர்  சங்கச் செயலாளர் உதயகுமார், அங்கன்வாடி சங்கம் மாவட்டச் செயலாளர் எஸ்.வசந்தகுமாரி, மாவட்டப் பொருளாளர் சாவித் திரி, மாநிலக் குழு உறுப்பினர் சடை யம்மாள் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலை  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் எல். ஜெயக்கொடி தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து  சிஐடியு மாவட்டச் செயலாளர் ந. வேலுச்சாமி பேசினார். கோரிக்கை களை விளக்கி தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ. பிரேமா, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் பி.பாண்டிமாதேவி பி. சரஸ்வதி ஆகியோர் பேசினர்.  ஆர்ப் பாட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் இரா. முருகேசன் பேசினார். ஆர்ப்பாட் டத்தின் நிறைவாக ஐசிடிஎஸ் மாநில  தலைவர் எஸ்.ரத்தினமாலா நிறை வுறையாற்றினார். முடிவில், மாவட் டப் பொருளாளர் எஸ்.குர்ஷித் நன்றி கூறினார்.