வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி
நாமக்கல், ஜூலை 18- நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள், பராமரிப்பு தொடர்பான கண்காட்சி ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல் பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவி லான கண்காட்சி ஜூலை 29 ஆம் தேதி நடைபெற வுள்ளது. வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தனி யார் வேளாண் இயந்திர நிறுவனங்கள், முகவர்கள் மூலம், பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக்கல்லூரி வளா கத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள், கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது. எனவே, மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களுக்குள் செல்லாத தனியார் பேருந்துகள் பறிமுதல்
தருமபுரி, ஜூலை 18- கிராமங்களுக்குள் செல்லாத தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து அதிகா ரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து புலிக்கரை, சோமனஅள்ளி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, சூடப் பட்டி, பிக்கனஅள்ளி, மல்லுப்படி வழியாக ஒசூர் செல் லும் தனியார் பேருந்துகள், அண்மைக்காலமாக அதிய மான்கோட்டை- ஒசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதாக வட்டாரப் போக்குவரத்துத் துறைக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் பாலக்கோடு மோட் டார் வாகன ஆய்வாளர் பாலசுப்ரமணி வியாழனன்று சோமனஅள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கண்கா ணிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக 4 தனியார் பேருந்துகள் சென்றன. இதையடுத்து அந்த பேருந்து ஓட்டுநர், நடத்து நர்களுக்கு கிராமங்கள் வழியாக செல்லும் வழித்தடத் தில் மட்டுமே பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட் டது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கொடநாடு வழக்கு: ஆக.14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
உதகை, ஜூலை 18– கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தர விட்டார். கொடநாடு பகுதியில் மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல் பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக முக்கிய குற்றவாளி சயான் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர் பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகி றது. இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த வாளை யார் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜ ராகினர். இதேபோல் அரசு தரப்பு வழக் கறிஞர்களான ஷாஜகான் மற்றும் கனக ராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசி ஐடி போலீசாரும் ஆஜராகினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் நடைபெற்ற பங்களா வில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2023 ஆம் ஆண்டு குற்றவாளி கள் சார்பில் மனு அளித்த நிலையில், அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய் தார். இந்நிலையில், மீண்டும் எதிர் தரப்பு குற்றம் நடைபெற்ற பங்களாவை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பத்தாவது குற்றவாளியான ஜித்தன் ஜாய் சார்பில் மனு அளிக்கப்பட்டி ருந்தது. அந்த அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி முரளிதரன் வழக்கின் விசார ணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.