மரத்தில் ஏறி போக்கு காட்டிய கரடி
உதகை, ஜூலை 7- உதகை தாவரவியல் பூங்காவில் மரத்தின் மீது ஏறி ஒரு மணி நேரம் போக்கு காட்டிய கரடியால் பரபரப்பு ஏற்பட் டது. நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா கண் ணாடி மாளிகை முன்பு உள்ள மரத்தில் ஞாயிறன்று இரவு கரடி அமர்ந்திருந்தது. அப்போது பூங்கா ஊழியர்கள் மரத்தில் உறுமல் சத்தத்தை கேட்டு டார்ச் லைட் உதவியுடன் உற்றுப் பார்த்தனர். அப்போது கரடி அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தாவரவியல் பூங்காவுக்கு வந்த வனத்துறை யினர் கரடியை பாதுகாப்பாக மரத்திலிருந்து இறங்க முயற்சி செய்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கரடியால் மரத்திலி ருந்து இறங்க முடியாமல் தவித்தது. வனத்துறையினர் மற்றும் பூங்கா ஊழியர்கள் நீண்ட தூரம் விலகிச் சென்று கரடி இறங்கும் வரை காத்திருந்தனர். பின்பு மெதுவாக மரத்திலிருந்து இறங்கிய கரடி அருகிலிருந்த வனப்பகு திக்குள் ஓடியது.
மருத்துவமனை கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு
கோவை, ஜூலை 7- பீளமேடு தனியார் மருத்துவமனை கழிவறையில், உயிரி ழந்த நிலையில் முதுகலை மயக்கவியல் துறை மாணவி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், வாகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பவபூரணி (29). எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர். இவர் கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை மயக்கவியல் பிரிவில் படித்து வந்தார். மேலும், அதே மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அவசர பிரி வில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று காலை 6 மணியளவில் மருத்துவமனை கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். இத னால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கழி வறை கதவை உடைத்து பார்த்த போது, பவபூரணி உயிரி ழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் பவபூரணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு: ஆட்டோ ஓட்டுநர்கள் மனு
ஈரோடு, ஜூலை 7– பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரி வித்தும், தங்கள் வாழ்வாதாரப் பிரச்ச னைகளை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்க ளின் ஆட்டோ ஓட்டுநர்கள் திங்களன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல் வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டாக அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, அர சால் அங்கீகரிக்கப்படாத “ரேபிடோ” போன்ற இருசக்கர பைக் டாக்சிகள் வாட கைக்கு இயக்கப்படுகின்றன. இது போக்குவரத்து சட்ட விதிகளுக்கு முற்றி லும் முரணானது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இந்த பைக் டாக்சிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், ஈரோடு காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள பள்ளிபாளையம் போன்ற மாவட்ட எல்லை தாண்டிய பகுதிகளுக் குப் பயணிக்கும்போது, போக்குவரத்து அதிகாரிகளால் விதிக்கப்படும் அபரா தங்கள் மிகக் கடுமையாக உள்ளன. நடைமுறையில் வாகனப் பதிவு முக வரியில் இருந்து 30 கி.மீ. தூரம் வரை பயணிக்க அனுமதி இருக்கும் நிலை யில், ஆட்டோக்களை “ஜம்பிங் பர்மிட்” மூலம் அனுமதிக்க வேண்டும். இந்த கடு மையான அபராதங்கள் கைவிடப்பட வேண்டும். ஏற்கனவே வாகன இன்சூரன்ஸ், பர் மிட், வரி, பெட்ரோல், கேஸ் மற்றும் வாகன உதிரிபாகங்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக ஆட்டோ ஓட் டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள் ளனர். இச்சூழ்நிலையில், பைக் டாக்சிக ளால் ஏற்படும் கூடுதல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், அவற்றை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். பைக் டாக்சிகளால் ஏற்படும் அச்சு றுத்தலை நீக்கி, ஆட்டோ ஓட்டுநர்க ளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என அம்மனுவில் கேட்டுக்கொண் டுள்ளனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு மனு

ததீஒமு நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, ஜூலை 7- ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலம் ஒன்றிய தீண் டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பு பேரவை கூட்டம் சத்தி யில் கே.ரங்கசாமி தலைமை யில் ஞாயிறன்று நடைபெற் றது. சகோதர சங்க நிர்வா கிகள் வாழ்த்தி உரையாற்றி னர். இதில், தலைவராக கே.ரங்கசாமி, செயலாள ராக கே.பாண்டியன், பொரு ளாளர் தோப்பூர் மூர்த்தி உட்பட 17 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். முடிவில், மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச்சாமி நிறைவுரையாற்றினார்.