250 பட்டியலின மக்களின் வீடுகள் பறிபோகும் அபாயம் ரயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, அக்.16- தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தி னால் 250 மக்களின் வீடுகள் பறி போகும் அபாயம் உள்ளதால், இத் திட்டத்தை மாற்று வழியில் அமைக்க வேண்டுமென பட்டிய லின மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி வட்டத்திற்குட்பட்டது மூக்கனூர் கிராமம். இங்கு 1941 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொரப்பூர் முதல் தருமபுரி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு, போக்குவரத்து இருந்து வந்தது. மூக்கனூரில் ரயில் நிலையம் இயங்கி வந்தது. வணிக ரீதியாக வருமானம் இல்லாததால் ரயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சுமார் 80 ஆண்டுகாலம் ரயில் இயக்கப்பட வில்லை. கடந்த சில ஆண்டுகால மாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களை இணைக்கும் வகை யில், தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டப் பணிகளை துவங்கி ரயில் இயக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்த னர். அதனடிப்படையில் ஒன்றிய அரசு இத்திட்டத்தை நிறைவேற்று வதாக அறிவித்து நில அளவீடு பணி கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரயில் பாதைக் கான இடம் எடுக்கும் போது மூக்க னூர் பட்டியலின மக்களின் சுமார் 250 வீடுகள் பறிபோகும் அபாயம் ஏற் பட்டுள்ளது. அதாவது, மூக்கனூர் கிராமத்தினுள் ரயில் பாதை செல்வ தாக கிராம மக்கள் தெரிவிக்கின்ற னர். இங்கு அரசு வழங்கிய தொகுப்பு வீடு முதல் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்று அதில் கிடைத்த பணத்தை வைத்து பல பேர் வீடு கட்டியுள்ளனர். வீடு என்பது வாழ்நாள் கனவு. இதை நாங்கள் உழைத்த பணத்தில் காட்டியுள்ளோம். இதை விட்டால் எங்களுக்கு வேறு இடம் கிடை யாது. இங்கு நிலத்தின் மதிப்பு அதிகம். எங்களால் ஒரு சென்ட் நிலம் கூட வாங்க முடியாது என அக் கிராமமக்கள் வேதனையுடன் தெரி வித்தனர். எனவே, கிராமத்தின் வெளியே 30 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் ரயில் பாதையும், ரயில் நிலையமும் அமைக்க வேண் டும் என மூக்கனூர் பட்டியலின மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்தி யுள்ளனர்.
