tamilnadu

img

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குக

சேலம், ஆக.23- இயற்கை சீற்றத்தால்  பாதிக்கப்பட்ட நபருக்கு  உரிய நிவாரணம் வழங்கிட வலியு றுத்தி வாலிபர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள  மாநகராட்சி நகர் நல அலுவலர் அரசு பங்களாவில் இருந்த பெரியமரம் ஒன்று கடந்த 29.7.19 அன்று மழையின் காரண மாக சரிந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவயிடத்திலே பலியானார். மேலும், அவ்வழியாக வந்த மதன் என்ற  இளைஞர் படுகாயமடைந்தார். அவருக்கு  இதுவரை எவ்வித மருத்துவ உதவியும்,  நிவாரணம் அரசு மற்றும் இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் தரப்பில் வழங்கப்பட வில்லை. எனவே படுகாயமடைந்து 25  நாட்களாக சிகிச்சை பெற்று வரும் மதனுக்கு  நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனக்கோரி வாலிபர் சங்க வடக்கு மாநகர குழு சார்பில் சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டது. இதனை மலைவாழ் இளைஞர் சங்க  மாநில பொதுச் செயலாளர்  என்.பிரவீன்  குமார்,  மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ்   நிர்வாகிகள் அளித்தனர்.