உடுமலை, ஜன. 6- திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, அம ராவதி நகர் சைனிக் பள்ளியில் இளநிலை மாண வர்களுக்கான விடுதி திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. சைனிக் பள்ளியில் இளநிலை மாணவர்க ளுக்காக கட்டில், அலமாரி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறி, தீ அணைக்கும் கருவி உள் ளிட்ட அனைத்து வசதிகளுடன் ரூ.9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான விடுதி அமைக் கப்பட்டுள்ளது. இவ்விடுதியை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பள்ளியில் முதல்வர் எச்.எஸ்.சிதானா, மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விடுதியானது 288 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.