tamilnadu

img

கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்

அவிநாசி, நவ. 29- அவிநாசி பகுதியில் வியாழனன்று கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்றது. அவிநாசி பகுதியில் சூளை, மடத்துபாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், செம்மகவுண்டம்பாளை யம், கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  பொது சுகதாரத் துறையினர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் துவக்கத்தில், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறிப்புகளை குழந்தைகளுக்கு கூறினர். இதன்பின் அனைத்து வீடு மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி, கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள கட்டடங்களின் மேற்கூரையில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  சாலையோரம் குவிந்திருந்த குப்பை, கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இப்பணியின்போது, மருத்துவக் குழுவினர், காய்ச்சல் குறித்து சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கினர்.