வியாழன், செப்டம்பர் 23, 2021

tamilnadu

img

இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவராக கே.கணேசன் பதவி ஏற்பு

திருப்பூர், ஜன. 6 - திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.கணேசன் திங்க ளன்று பதவி ஏற்றுக் கொண் டார்.  இடுவாய் கிராம உள் ளாட்சி தேர்தலில் வெற்றி  பெற்ற தலைவர், வார்டு  உறுப்பினர்கள் பதவி யேற்பு விழா திங்களன்று நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியதும், மார்க்சிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த கே.கணேசன் அரசியல் அமைப்புச் சட்டப் படி நேர்மையாக செயல்படுவதாக உறுதியேற்றுக் கொண்டு பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து 1ஆவது வார்டு உறுப்பினராக பரமசிவம், 2ஆவது வார்டு சர்மிளாதேவி செல்வராஜ், 3ஆவது வார்டு ஆர்.ஈஸ்வரி, 4ஆவது வார்டு ரமேஷ், 5ஆவது வார்டு பூவதி, 6ஆவது வார்டு டி.ஈஸ்வரி, 7ஆவது வார்டு சுப்பிரமணியம், 8ஆவது வார்டு எம்.கணேசன் மற் றும் 9ஆவது வார்டு உறுப்பினராக பரமேஸ்வரி ஆகி யோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட அனைத்து அரசி யல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக கே.கணேசன் ஏற்புரை ஆற்றும் போது, இடுவாய் ஊராட்சியில் அனைத்துப் பகுதிகளுக் கும் பாரபட்சம் இல்லாமல் சீரான முறையில் குடிநீர் கிடைப்பதற்கு முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும். இரண்டாவதாக பயன்பாடில்லாமல் இருக்கும் பொதுக் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவ டிக்கை எடுக்கப்படும். அனைத்துத் தரப்பினரையும் அரவ ணைத்து இடுவாய் ஊராட்சி மக்களின் அடிப்படைப் பிரச் சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இவ்விழாவில் அனைத்துக் கட்சியினர், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இடுவாய் ஊர்ப் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். ஊராட்சி மன் றச் செயலர் ரமேஷ் நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

;