விவசாயிகள் மனு
சேலம், ஜன. 10- எடப்பாடி பகுதியில் உயர் மின் கோபுர பணிகளால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் கோட்டாட் சியரை சந்தித்து மனு அளித்தனர். விளை நிலங்களில் உயர்மின் கோபுர அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட சங்ககிரி, எடப்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் சங்ககிரி கோட்டாச்சியரை சந்தித்து தங்க ளுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில், நிலத்திற்கான இழப் பீடு,மரபயிர்களுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். முழுமையான இழப் பீட்டினை வழங்கியபிறகே பணிகளை தொடங்க வேண்டும், பவர்கிரீட் அதிகாரிகள் விவ சாய நிலங்களில் அத்துமீறி செயல்படுவதை தடுக்ககோரி யும்,விவசாயிகளுக்கான இழப் பீட்டை முன்னதாக தெரிவிக்க வும் கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டறிந்த கோட் டாட்சியர் ஜன. 13ஆம்தேதி விவசாயிகள், பவர்கிரீட் அதிகாரி கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணு வதாக உறுதி அளித்தார். முன்னதாக, இந்த மனுவினை அளிக்கையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள் சங்ககிரி தாலுகா செயலா ளர் ராஜேந்திரன், செங்கோட்டை யன் மற்றும் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் பலர் கலந்து கொண்டனர்.