tamilnadu

img

கோவை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பல்லடத்தில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.


‘பம்ப்’ தலைநகரின் சீரழிவுக்கு யார் காரணம்?


இந்தியாவில் பம்ப் தொழிலின் தலைநகரமாக கோவை விளங்குகிறது. ஆனால் தற்போது மோடியின் ‘நிலையான அரசு’ நடத்திய பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி தாக்குதல்களால் அந்த தொழில் முடங்கியுள்ளது. மூன்றில் இரண்டு மடங்கு பம்ப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையும், வாழ்வாதாரமும் இழந்து நிற்கின்றனர். மோடி நடத்திய ‘நிலையான அரசு’ செய்த சாதனை இதுதான். மத்தியில் ஒரு மாற்று அரசு அமையும்போது இந்த தொழில்களுக்கு கடன் உதவி செய்து மீட்க முடியும். அதன்மூலம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.


2004 போல் ஆட்சி மாற்றம்


2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்து மத்தியில் மாற்று அரசு அமைய, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார். இன்று அந்த பணியை மு.க.ஸ்டாலின் தனது தோள்களில் ஏற்றிக் கொண்டு செயல்படுகிறார். அப்போது அமைந்த அரசு இடதுசாரிகளின் ஆதரவோடு இருந்தது. இடதுசாரிகளின் தொடர் முயற்சியால் நூறுநாள் வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், வன உரிமைச்சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது. அத்தகைய ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசு அமைவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.


* கோவை, திருப்பூர் தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதிலிருந்து...


;