தொல்.திருமாவளவன் பேச்சு
கோவை, பிப்.10 - சங்பரிவார்களை காலூன்ற விடாமல் இருக்க நீலம், சிவப்பு, கருப்பு மூன்றும் இணைந்தாக வேண்டுமென தொல்.திரு மாவளவன் பேசினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் கோவையில் ஞாயிறன்று நீலச்சட்டை பேரணி, சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. கோவை அண்ணா சிலை யில் இருந்து துவங்கிய இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து மகளிர் பாலிடெக் னிக் கல்லூரி அருகே சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலா ளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில் தமிழ்புலிகள் அமைப் பின் தலைவர் நாகை திருவள்ளுவன் துவக்க உரையாற்றினார். மே 17 இயக்கத்தின் திரு முருகன் காந்தி மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். இம்மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் இரா.அதியமான், மனிதநேய மக்கள் கட்சி பேரா.ஜவாகிருல்லா மற்றும் உ.தனியரசு எம்எல்ஏ உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் கி.வீரமணி பேசுகையில், தீண் டாமை என்பது சாதியின் அங்கமாகும். இச்சமூகத்தில் சாதி ஒழிந்தால், தீண்டாமை ஒழியும். ஆனால் மனு தர்ம கோட்பாடு தான் நம் நாட்டை ஆள்கிறது. மத்தியில் நம்மை ஆளும் நரேந்திர மோடி, அமித்ஷா வகைறாக் களை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத். இருப்பினும், இந்த தமிழ் மண்ணின் குணாதியச்சத்தை எவராலும் மாற்ற முடியாது. மேலும், இம்மாநாட்டிற்கு பல்வேறு இடையூறுகள் காவல்துறையின ரால் ஏற்படுத்தப்பட்டது. அதனையும் மீறி சிறப்பான முறையில் மாநாடு நடந்து வருகி றது. இன்னும், ஓராண்டு காலத்தில் ஆட்சி மாற்றம் வரும் . அப்போது எல்லாம் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசு கையில், கருஞ்சட்டை, நீலச்சட்டை பேர ணியை அடுத்து பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பு செஞ்சட்டை பேரணியை நடத்தும். அம்பேத்கர் பயன்படுத்தியதால் தான் பலர் நீலத்தை பயன்படுத்துவதில்லை. சங்பரிவார்கள் நீலத்தை ஏற்க மாட்டார்கள். நீலம் என்றால் அம்பேத்கர், சாதி ஒழிப்பு, சகோதரத்துவம் என அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. நீலம் என்பது வண்ணங்களின் அடையாளம் அல்ல. கொள்கை அடையா ளம். சாதி ஒழிப்பு என்ற கருத்து அம்பேத்கர், பெரியார் காலத்தில் உருவானது அல்ல. கெளதம புத்தர் காலத்தில் உருவானது. நாட கக் காதல் என சொல்பவர்களும், கூலிப்படை வைத்து கொல்பவர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ் கருத்திற்கு ஆதரவானவர்களே. தருமபுரியில் 3 கிராமங்களை எரித்தவர்கள், ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு எதிராக இருப்பது தான் நாடக அரசியல். சாதி கலவ ரத்தை தூண்ட தன் மீது அவதூறு பரப்பினார் கள். சங்பரிவார்களை காலூன்ற விடாமல் இருக்க, ஒன்று சேர வேண்டும், நீலம், சிவப்பு, கருப்பு மூன்றும் இணைந்தாக வேண்டும். தமிழ் மண், பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். சாதி ஒழிப்பே, மக்கள் விடுதலை. இவ்வாறு அவர் பேசினார். கு.இராமகிருட்டிணன் பேசுகையில், சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் நிற்க வேண்டுமானால், மத்திய அரசு அச்சட் டத்தை திரும்ப பெற வேண்டும். தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், சாதியின், மதத்தின் பெயரால் மனிதத்தை படுகொலை செய்யும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். ஆளும் அரசுகள் போராட்டக்காரர் களை ஒடுக்குகிறது. பெரியாரை தவிர்த்து தமிழ் தேசிய அரசியல் இல்லை. மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலை இன்னும் உள்ளது என்றார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவ ஹிருல்லா பேசுகையில், இந்திய அர சியலமைப்பு சட்டமாக மனு ஸ்மிருதி இருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசரில் எழுதி யுள்ளது. ஆகவே, சாதியத்தை ஒழித்து மதச் சார்பற்ற ஜனநாயகத்தை உருவாக்க சேர்ந்து உழைப்போம் என அவர் தெரிவித்தார். மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. மற்றவர்களுக்கும் சேர்த்து தான் இஸ்லாமியர்கள் போராடி கொண்டி ருக்கிறார்கள். கல்வி, இட ஒதுக்கீடு உரிமை பறிக்கப்படுகிறது. மனு தர்ம ஆட்சி மீள கட்டமைப்பு செய்யப்படுகிறது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மனு தர்ம எரிப்பு போராட்டம் நடத்தும் என தெரிவித் தார்.
மேலும், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி, தமிழர் விடியல் கட்சியின் மா.டைசன், மார்க்சியப் பெரியா ரிய பொதுவுடைமைக் கட்சியின் வாலசா வல்லன், பொழிலான் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்று பேசினர். முன்னதாக, இந்த மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, மக்களை பிரிக்கும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். கேரள மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகராக நியமித்த தைப்போல் தமிழகத்திலும் அனைத்து சாதி யினரும் அர்ச்சகராக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், அரசே பாதுகாப்பு இல்லங்களை துவக்க வேண்டும். ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். கோவையில் குடிநீர் விநியோக உரிமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத் திற்கு வழங்கி இருக்கும் ஒப்பந்தத்தினை கைவிட்டு, கோவை மாநகராட்சியின் பொறுப்பிலேயே குடிநீர் வழங்க வேண்டும். மேலும், போராடுபவர்களையும், மக்களின் போராட்டங்களையும் இழிவுபடுத்தி பேசி வரும் நடிகர் ரஜினிகாந்தை இக்கூட்ட மைப்பு வன்மையாக கண்டிக்கின்றது என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.