tamilnadu

இந்திய அரசியல் சாசனத்தை சீர்குலைப்பதை அனுமதியோம் தொல்.திருமாவளவன் பேச்சு

 மதுரை, மார்ச் 8- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதி ராக மதுரை மகபூப்பாளையத்தில் 24-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்த போராட்டத்தில் தமிழர் தேசிய முண்ணனி தலைவர் பழ.நெடு மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இதில், திருமாவளவன் பேசியதாவது:- இந்திய வரலாற்றில் காந்தி காலத்தில் தான் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதற்குப் பிறகு இந்திய அரசியல் வர லாற்றிலேயே நாடு முழுவதும் இரவு பக லாக பெண்கள் பங்கேற்கும் போராட்டம் இது தான்.  முஸ்லிம்களை வெளியேற்றிவிட்டு இந்தியாவை இந்துஸ்தான் என அறிவிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை சீர் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.  தில்லியில் முஸ்லிம்களின் கடைகள், வீடு கள் சூறையாடபட்டதன் நோக்கம் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரு வது தான். குஜராத்தில் மோடியும் அமித்ஷா வும் எவ்வாறு கலவரத்தை ஏற்படுத்தி முஸ் லிம்களை கொன்றார்களோ அதுபோல வடகிழக்கு தில்லியில் கலவரத்தை ஏற்படுத்தினார்கள். முஸ்லிம்கள் ஓட்டு தேவையில்லை, முஸ்லிம்கள் தேவை யில்லை, அவர்களை விரட்ட வேண்டும் என்பதற்காக வெளிப்படையாகவே முடி வெடுத்து இந்தச் சட்டைத்தை மோடியும், அமித்ஷாவும் அறிவித்துள்ளனர். தற்போது இரண்டாவது சுகந்திரப்போர் நடைபெற்று வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் முஸ்லிம்களுக்கு தோள் கொடுக்கு மென்றார்.
பழ.நெடுமாறன்
முன்னதாக தமிழர் தேசிய முன்னணி யின் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகை யில், இது முஸ்லிம்களின் போராட்டமல்ல. ஒட்டு மொத்த மக்களின் போராட்டம். மாநில அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தக் கூடாது. அதையும் மீறி நடத்தினால் நாடு முழுவதும் பெரும் புரட்சி வெடிக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத் தில் அதிமுக தீர்மானம் கொண்டு வரா விட்டால் திமுக தீர்மானம் கொண்டு வர வேண்டும். அப்போது அதிமுக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிவிடும். திமுக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத அவ சர நிலை நீடிக்கிறது என்றார்.