6 வயது சிறுமி பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, துடியலூரில் மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவையை அடுத்த பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் - வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல், திங்களன்று பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளிமுடிந்து வீடு திரும்பவில்லை. இதனால்அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், விடிய, விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், செவ்வாயன்று காலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் உடல் முழுவதும் காயங்களோடு சிறுமிசடலமாக கிடந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றிய உடற்கூறாய்வுக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி பெற்றோர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
உடலை வாங்க மறுப்பு
இந்நிலையில் சிறுமி கொலை சம் பந்தமாக 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கோவை அரசுமருத்துவமனையில் சிறுமியின் பெற்றோரிடம் கோவை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து கோவை அரசுமருத்துவமனையில் உறவினர்களிடமும் மற்றும் மாதர் சங்கத்தினரிடமும் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் வீடியோக்களை காண்பித்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் இந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், காவல்துறையினர் அளித்த உறுதியின் பேரில், பெற்றோர் உடலைபெற்றுக் கொண்டனர். முன்னதாக, துடியலூர் பேருந்து நிலையம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற் கும் மேலாக இந்த போரட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர். இதன்பின் குழந்தையின் பெற்றோர் மற்றும் மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம், மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, மாவட்டத் தலைவர் அமுதா உள்ளிட்ட மாதர் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து மாதர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத் திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்,” என கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தனர்.
ஆட்சியர் பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவிக்கையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத் துள்ளனர். மேலும், சிறுமியின் பெற் றோர் ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அவர்கள், அரசிடம் உரிய நிவாரணம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப் பட்டுள்ளது. அதேபோல், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பும், மக்களின் முன்பும் நிறுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த உணர்வுகளை மதிக்கிறோம். போராட்டத்திற்கு முன்பு எந்த அளவிற்கு விரைவு நடவடிக்கை எடுக்க முடியுமோ, அந்த அளவிற்கு நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.