கொச்சி, ஆக.10- தங்கக் கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை கொச்சி என்ஐஏ நீதிமன்றம் நிராகரித்தது. தங்கக் கடத்தலில் சொப்னாவுக்கு தொடர்பு இருந்ததற்கான முதன்மை ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியது. வழக்கு நாட்குறிப்பு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஜாமீன் மறுக்கப்பட்டது. முன்னதாக, ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது தங்கக் கடத்தல் வழக்கில் யுஏபிஏ எவ்வாறு நிலைக்கும் என்று நீதிமன்றம் என்ஐஏவிடம் கேட்டி ருந்தது, பார்சலை விடுவிக்க சொப்னா தலையிட்டதாகவும், யுஏபிஏ சுமத்தத்தக்க ஆதாரங்கள் இருப்பதாகவும் என்ஐஏ தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து, விசாரணையின் விவரங்கள் அடங்கிய வழக்கு நாட்குறிப்பை என்ஐஏ குழு நீதிமன்றத்தில் அளித்தது.