tamilnadu

img

உடல் நல உறுதி மொழிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.1- ஓசூர் காவேரி மருத்துவமனையில் புத்தாண்டு வித்தியாசமாக கொண்டா டப்பட்டது.  நவீன உலகிற்கு ஏற்ப என் உடல் நலனை கெடுக்கும் துரித உணவுக்கு மக்கள் மாறி வருகின்றனர். கம்ப்யூட்டர், செல்போன்,டிவி, நொறுக்குத் தீனி கள், தேவைக்குஅதிகமாக பயன்ப டுத்தப்பட்டு வருவதாலும் சுற்றுச்சூழல் மாசு பாதிப்பாலும் தூக்கம், வயிறு, உடல் நலம், மற்றும் மூளையும் கெட்டு  மன அழுத்தம், சக்கரை, ரத்த அழுத்தம்,  உப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, எல்லோருக்கும் எல்லா வியாதி களும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு புத்தாண்டில் பொதுமக்களுக்கு உறுதி  மொழி ஏற்பு நிகழ்ச்சி ஓசூர் காவேரி மருத்துவமனையில் நடைபெற்றது. தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தல் சர்க்கரை, உப்பு மிக குறை வாக பயன்டுத்துதல், நடைபயிற்சி செய்தல், எட்டு மணி நேர தூக்கம், உட்பட  வலியுறுத்தி பொது மக்களை மாலை வரை கையழுத்து போடச் செய்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் விஜய பாஸ்கர், மருத்துவர்கள் அரவிந்தன், நாகேஷ் குமார், அருண்குமார், அருண்,  அலுவலர்கள் சோபன் பாபு, வினிதா, சந்தியா, ஜெயந்தி பிரதீப், விக்னேஷ் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.